உலக சர்வாதிகாரிகளின் வரிசையில் தற்போது முன்னிலையில் இருப்பவர் தான் வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன்.அமெரிக்கா மற்றும் ரசியாவின் ஆதிக்கத்தினால் உள்நாட்டு போரில் சிக்கிக்கொண்டு கடந்த 70 வருடங்களுக்கு மேலாக பிரிந்து கிடைக்கும் கோரியவின் வடபகுதியை 3 தலைமுறையாக ஆட்சி செய்யும் கிம் குடும்பத்தின் வாரிசான இவர் தன் நாட்டு மக்களிடம் கொடுங்கோலா ட்சியை நடத்தி வருகிறார்.
வெளிநாடுகளின் தொடர்பு அறவே இன்றி தனிச்சயாக இயங்கிவரும் வடகொரியாவில் கடைபிடிக்கப்படும் சட்டங்கள் ஹிட்லர் ஆட்சியில் கூட கேள்வி பட்டிடாத அளவுக்கு கொடூரமாகவும் சிறுபிள்ளைத்தனமாகவும் இருக்கக்கூடியவை உதாரணத்திற்கு எவரும் ஜீன்ஸ் அணியக்கூடாது, பெண்கள் வாகனம் ஓட்டக்கூடாது, எந்த ஒரு மதங்களையும் பின்பற்ற கூடாது, வெளிநாட்டிற்கு செல்லக்கூடாது போன்ற பல சட்டங்களை தீவிரமாக கடைபிடித்து மீறுபவர்களுக்கு மரணதண்டையும் விதிக்கப்படும். அங்கு பொழுதுபோக்கிற்கு 3 சேனல்கள் தான் உண்டு, இணையதள வசதிகள் கிடையாது, அண்டைநாட்டுடனான உறவு துண்டிக்கப்பட்டு ஏறக்குறைய 70 வருடங்களுக்கு முன் இருந்தது போலவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அம்மக்கள்.
இவை அனைத்தையும் தன் சர்வாதிகாரத்தை காத்துக்கொள்வதற்கும் மேற்கத்திய கலாச்சாரங்களின் தாக்கம் மக்களின் மத்தியில் புரட்சி சிந்தனையை விதைக்கக்கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது என்று பல கருத்து உண்டு இதற்கு நேர்மாறாக முதலாளித்துவதையும் ஏகாதிபத்தியத்தையும் ஏற்றுக்கொண்ட தென்கொரியா, பொருளாதாரம், வர்த்தகம், தொழிநுட்பம், என அணைத்து துறைகளிலும் அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது.
இவர்களின் திரைப்படங்கள் உலக மக்கள் அனைவரையும் ஈர்க்கும் வகையில் உயர்ந்த தரத்தில் இருப்பதுடன் சர்வதேச அளவிலான அங்கீகாரத்தை பெற்று சிறந்த திரைப்படத்துறைகளில் ஒன்றாக விளங்குகிறது. இந்நிலையில் தென்கொரியாவை சேர்ந்த டாங் ஹியூக் இயக்கிய SQUID GAME எனும் தொடர் செப்டம்பர் 17 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது, சமூகத்தின் குரூர தன்மையையும், இரக்கம், அன்பு, சகோதரத்துவம் மட்டுமே அதனை ஈடுகட்ட தேவை என்பதையும் அனைவரும் ரசிக்கும் வகையில் வித்தியாசமாக படமாகியிருந்தது உலக மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுத்தந்தது.
இதனின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கும் நிலையில் இத்தொடரை பென்டிரைவில் ஏற்றி விற்ற வடகொரியாவை சேர்ந்த நபருக்கு 500 பேர் முன்னிலையில் துப்பாக்கிச் சூடு மூலம் மரண தண்டனையை நிறைவேற்ற கிம் ஜாங் உன் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி ஸ்க்விட் கேம் தொடரை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் அந்த பென் டிரைவை வாங்கிய உயர்நிலை பள்ளி மாணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதுடன் மேலும் ஆறு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஆசிய செய்திகளுக்கான தனியார் ஊடகமான ரேடியோ ஃப்ரீ ஏசியா குறிப்பிட்டுள்ளது.
வடகொரியா மக்கள் அவ்வப்போது சீனா எல்லை வழியே கடத்தி வரப்படும் சிடிக்கள் மூலமாக வெளிநாட்டு திரைப்படங்களை கண்டு ரசித்து வருவதை அறிந்த கிம் ஜாங் உன் அரசு வெளிநாட்டு படங்களை விற்பவர்கள், பரப்புபவர்கள், காண்பவர்களை கண்டறிந்து தண்டனை வழங்கும் சட்டத்தை கொண்டுவந்துள்ளது. அனால் கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக எல்லை மூடப்பட்ட நிலையில் இருக்கும் போது எப்படி இந்த வெப்சீரிஸ் கடத்தி கொண்டு வரப்பட்டது என்பதை கண்டுபிடிக்கும் வரை கைது செய்யப்பட்ட அனைவரும் இரக்கமின்றி விசாரிக்கப்படுவதுடன் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா நாடுகளை சேர்ந்த திரைப்படங்களின் வீடியோக்களை கடத்தி வருவோருக்கு மரண தண்டனை என்றும், வெளிநாட்டு படங்களை காண்போருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்றும் அறிவித்துள்ளது.