இந்திய பெருங்கடலை தாக்கவுள்ள ஃப்ரெடி சூறாவளி.... பாதிப்புகள் எப்படி இருக்கும்?!!

இந்திய பெருங்கடலை தாக்கவுள்ள ஃப்ரெடி சூறாவளி.... பாதிப்புகள் எப்படி இருக்கும்?!!
Published on
Updated on
1 min read

சர்வதேச விண்வெளி நிலையம் வெப்பமண்டல சூறாவளி ஃப்ரெடியின் கண்ணை மேலே இருந்து பதிவு செய்து பல தகவல்களை மேலும் அது மடகாஸ்கரை நோக்கி நகரும் காட்சிகள் மிகவும் ஆக்ரோஷமாக இருப்பதாகவும் கூறியுள்ளது.

இந்தியப் பெருங்கடல் தீவுக்கு "நேரடி அச்சுறுத்தலை" ஏற்படுத்தி, வெப்பமண்டல சூறாவளி ஃப்ரெடி நெருங்கி வருவதால் மொரீஷியஸ், விமானங்களை தரையிறக்கியுள்ளது இந்திய விமான நிலையம். மேலும் அந்த நாடு தொடர்பான பங்குச் சந்தையையும் மூடியுள்ளது.  மடகாஸ்கரின் நான்கு பகுதிகளில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படும் என முன்னறிவிப்பாளர்கள் கணித்துள்ள நிலையில், இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவுகளையும் தற்போது சூறாவளி நெருங்கி வருகிறது.  

இந்தோனேசியாவிற்கு அருகே இரண்டு வாரங்களுக்கு முன்பு உருவான ஃப்ரெடி, அடுத்த வார தொடக்கத்தில் ஒரு பயங்கரமான 5 சூறாவளிக்கு சமமான வலிமையுடன் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என ரீயூனியனில் உள்ள ஐக்கிய நாடுகளின் பிராந்திய வானிலை கண்காணிப்பு மையம் கணித்துள்ளது.

இந்த சூறாவளியை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.  மொரீஷியஸில் எந்த அரசாங்க சேவைகளும் இயங்கவில்லை.  அதைப்போலவே கடைகள், வங்கிகள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் பொது போக்குவரத்து அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது.  தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என மக்களுக்கு மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் வலியுறுத்தியுள்ளார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com