சீன பலூனில் மின்னணு கண்காணிப்பு தொழில்நுட்பம் பொருத்தப்பட்டிருந்ததாகவும், அமெரிக்க தகவல் தொடர்புகளை கண்காணித்து வருவதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனா உளவு பலூன்:
கடந்த காலங்களில் அட்லாண்டிக் பெருங்கடலில் சீன உளவு பலூனை அமெரிக்கா குறிவைத்து தாக்கியது. அதனை ஆராய்ந்த போது இந்த சீன பலூன் உளவு பார்க்கும் திறன் கொண்டது என்றும், சிக்னல் நுண்ணறிவு சேகரிக்கும் திறன் கொண்டது என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. மேலும் சீனாவின் இந்த உளவு பலூன் 5 கண்டங்கள் மற்றும் 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் பறந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை கண்காணிக்கும் சீனா:
சீன பலூனில் மின்னணு கண்காணிப்பு தொழில்நுட்பம் பொருத்தப்பட்டிருப்பதாகவும் அமெரிக்க தகவல் தொடர்புகளை கண்காணித்து வருவதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சீன பலூன் எங்களைக் கண்காணிப்பது எங்களுக்குத் தெரியும் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
குறிவைத்து தாக்கப்பட்ட பலூன் சீன ராணுவத்தால் தயாரிக்கப்பட்டது என்றும், கண்காணிப்புக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. பலூனில் பல ஆண்டெனாக்களும் இருந்ததாகவும் தற்போது அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பலூனின் குப்பைகளை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
உறவில் விரிசல்:
உளவு பலூன் காரணமாக, சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீன உளவு பலூன் குறித்து சீனாவை விமர்சித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீனாவுக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனும் அவரது சீன பயணத்தை ரத்து செய்துள்ளார்.
மறுத்த சீனா:
அதே நேரத்தில் ஜோ பைடனின் இந்த கருத்துக்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. ஜோ பைடனின் அறிக்கைக்கு சீனா கடுமையாக பதிலளித்துள்ளது. அதில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பல சிக்கல்களால் சூழப்பட்டுள்ளார் என்று பைடன் கூறுவது மிகவும் பொறுப்பற்ற செயல் என தெரிவித்துள்ளது.
-நப்பசலையார்