ஒரு லட்ச மதிப்புள்ள தொலைபேசியை ஆர்டர் செய்த நபருக்கு டெலிவரியான காஸ்ட்லி சாக்லேட்!!

இங்கிலாந்தை சேர்ந்த நபர் ஒருவர் ஆன்லைனில் ஒரு ஐஃபோனை ஆர்டர் செய்துள்ளார்.இரண்டு வாரங்களாக தாமதமான டெலிவரி இன்று சாக்லேட்டில் முடிவடைந்த சம்பவம் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு லட்ச மதிப்புள்ள தொலைபேசியை ஆர்டர் செய்த நபருக்கு டெலிவரியான காஸ்ட்லி சாக்லேட்!!
Published on
Updated on
1 min read

புதிய ஐஃபோனுக்கு ஆன்லைனில் அவர் ஆர்டர் செய்யும் பொழுது £1,045 ரூபாயினை செலுத்தியதாகவும் ஆனால் டெலிவரி வருவதற்கு இரண்டு வாரங்களாக தாமதமானதாக தெரிவித்துள்ளார்.பிறகு அவரே DHL கிடங்கில் இருந்து பார்சலை சென்று வாங்கி வந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் ஆன்லைனில் ஐஃபோனை ஆர்டர் செய்ததால் புதிய மொபைலுக்காக அவர் ஆர்வத்தோடு காத்திருந்ததாகவும், அதனை பெற்ற பின்பு பார்சலை பிரித்து பார்த்ததில் கிறித்துமஸ் தினத்தன்று அவர் ஏமாற்றம் அடைந்ததாக வருதத்தோடு தெரிவித்துள்ளார்.

டெலிவரி வருவதற்கு தாமதமாகி கொண்டு போன நிலையில் இவரே சென்று பார்சலை வாங்கியுள்ளார்.அதனை திறந்து பார்க்கையில் பெட்டியில் இரண்டு Cadbury's White Oreo சாக்லேட் பார்கள் இருந்துள்ளன.அவை வெள்ளை நிற டாய்லெட் பேப்பரில் சுற்றப்பட்டு அழகாக மூடப்பட்டிருந்ததாகவும் கூறினார்.

மேலும் லாஜிஸ்டிக்ஸ் தொழில் செய்து வரும் கரோல் பார்சலில் உள்ளே டேப் ஒட்டப்பட்டிருந்ததை கவனித்த பின்பு அவருக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறினார்.இதனை கண்டுபிடித்த நிலையில் இதனை வெளிபடுத்த சமூக வலைதளங்களில் DHL ஐ டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனை சாக்லேட் மற்றும் பேப்பர் ரோல்கள் என அவருக்கு டெலிவரியில் தவறாக வந்த அனைத்தையும் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டதாக தெரிகிறது.மேலும் இதுகுறித்து புகார்களும் அளித்துள்ளார்.

டெலிவரி ஆகி ஒரு மாதம் காலம் ஆகியும் அவரது கைகளுக்கு பார்சலை ஒப்படைக்காத DHL இச்சம்பவம் குறித்து விசாரணையை தொடங்குவதாகவும் கரோலுக்கு பார்சலை மாற்றாக கொடுத்த அனுப்புநரிடமும் இதை பற்றிய தகவல்களை கேட்டுள்ளதாகவும் டிஎச்எல் நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் கரோலும் நான் பணிபுரியும் டிப்போவில் இருந்து பார்சலை பெறும் பொது கவனித்து இருக்க வேண்டும் என்பதை தவறியதாகவும் தெரிவித்தார்.மேலும் இது குறித்து டிஎச்எல் நிறுவனம் தவறுதலாக பார்சல் மாறிவிட்டதாகவும் தங்களை மன்னிக்கும் படியும் கரோலிடம் கேட்டுள்ளனர்.மன்னிப்பு கேட்ட பின்பும் ஆவலோடு ஆர்டர் செய்து புதிய தொலைபேசியின் வருகைக்காக காத்திருந்து ஏமாறியது அவருக்கு மன சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com