கொரோனா எதிரொளி.. வறுமைக்கு தள்ளப்பட்ட 79% இந்தியர்கள் - உலக வங்கி அறிக்கை..!
கோவிட்-19 காரணமாக 56 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் வறுமைக்கு தள்ளப்பட்டள்ளனர்.
கடந்த 2020ம் ஆண்டு கொரோனா எதிரொளியால் தீவிர வறுமைக்கு தள்ளப்பட்டவர்களில் 79 சதவீதத்தினர் இந்தியர்கள் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
வறுமை மற்றும் பகிர்ந்தளிக்கப்பட்ட சொத்து என்ற தலைப்பில் உலக வங்கி ஒரு ஆய்வை நடத்தியது. அதன்படி உலகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு மட்டும் 7 கோடியே 10 லட்சம் பேர் தீவிர வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கிட்டத்தட்ட 5 கோடியே 60 லட்சம் பேர் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளே உலகளாவிய வறுமை அதிகரிப்புக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது. உக்ரைன் போர், சீன வளர்ச்சி மந்தம், உணவு மற்றும் எரிசக்தி விலை உயர்வு ஆகியவற்றால் 2022 ஆம் ஆண்டில் வறுமை மேலும் அதிகரிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.