தைவானை கைப்பற்றும் முயற்சியில் தொடர்ந்து தீவிரம் காட்டும் சீனா...!!

தைவானை கைப்பற்றும் முயற்சியில் தொடர்ந்து தீவிரம் காட்டும் சீனா...!!
Published on
Updated on
1 min read

இன்று நடந்த போர் பயிற்சியின் போது சீனா மறைமுகமாக தைவானை சுற்றி வளைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  அதிக எண்ணிக்கையிலான போர் விமானங்கள் மூலம் தைவானை கைப்பற்றுவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைப்பற்ற முயற்சி:

இதற்கு முன்னதாக, தைவான் அருகே வெடிமருந்துகளை ஏற்றிச் செல்லும் விமானங்கள் மூலமாக தாக்குதல் நடத்த சீனா முயற்சி செய்தது.  அதைக் குறித்து கேள்வியெழுப்பப்பட்ட போது போர் பயிற்சியில் ஈடுப்பட்டிருந்ததாக சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  அதன் பிறகு சீனாவின் ஷான்டாங் விமானம் தாங்கிக் கப்பலும் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டதுடன் வெடிமருந்துகளை ஏற்றிச் செல்லும் H-6K போர் விமானங்களின் பல படைப்பிரிவுகள் தைவானைத் தாக்க பயிற்சி செய்ததாக சீன இராணுவத்தின் கிழக்கு தியேட்டர் கமாண்ட் பிரிவும் தெரிவித்துள்ளது.

தனி நாடு:

தைவான் தன்னை ஒரு சுதந்திர நாடு என்று அழைத்து வருகிறது.  இந்த நாட்டிற்கென தனி அரசியலமைப்பு உள்ளதுடன் அதற்கென தனி அதிபரும் பதவியில் உள்ளார்.  ஆனால் சீனா அதை அங்கீகரிக்க விரும்பவில்லை. தொடர்ந்து அதை கைப்பற்றும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது.  அதனுடன் சீனாவின் தற்போதைய அதிபரான ஜி ஜின்பிங்கும் ஒரு நாள் ராணுவத்தால் தைவானை கைப்பற்றுவேன் எனவும் பலமுறை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சீனாவின் முயற்சி:

ஒரு நாள் தைவான் சீனாவின் எல்லையில் இணைக்கப்படும் எனவும் சீனாவின் அதிபர் அதன் தலைவர் ஆவார் எனவும் தொடர்ந்து சீனா தரப்பில் கூறப்பட்டு வருவதுடன் அதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து செயலாற்றி வருகிறது.  அதற்கான ஒரு முன்னேற்பாடாகவே இன்றைய தாக்குதல் பார்க்கப்படுகிறது.  தைவான் மீதான சீனாவின் தாக்குதலுக்கு உலக நாடுகள் முழுமையும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com