உக்ரைனிலிருந்து படைகளை விலக்கிக் கொண்டால் ரஷ்யா மீதான பொருளாதார தடை நீக்கப்படும் - பிரிட்டன் அறிவிப்பு

உக்ரைனிலிருந்து படைகளை விலக்கிக் கொண்டால் ரஷ்யா மீதான பொருளாதார தடை நீக்கப்படும்
உக்ரைனிலிருந்து படைகளை விலக்கிக் கொண்டால் ரஷ்யா மீதான பொருளாதார தடை நீக்கப்படும் - பிரிட்டன் அறிவிப்பு
Published on
Updated on
1 min read

உக்ரைனிலிருந்து துருப்புகளை விலக்கிக்கொண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற படையெடுப்பில் ஈடுபடமாட்டேன் என ரஷ்யா உறுதியளித்தால், அந்நாட்டின் மீதான பொருளாதார தடையை விலக்கி கொள்வதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ஒரு மாதத்திற்கும் மேலாக ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதனால், பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கருதி வரும் உலக நாடுகள், ரஷ்யாவை எச்சரிக்கும் விதமாக அந்நாட்டின் மீது கடும் பொருளாதார தடையை விதித்து வருகின்றன.

இதனால் ரஷ்யா அதிபர் புடினுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில்  பிராந்திய பாதுகாப்பை ரஷ்யா உறுதி செய்தால், அந்நாட்டின் மீதான பொருளாதார தடையை நீக்கி கொள்வதாக பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலர் லிஸ் டிரஸ் தெரிவித்துள்ளார். இதேபோல் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், உக்ரைனிலிருந்து அகதிகளாக வெளியேறும் ஒரு லட்சம் பேரை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com