புல்டோசரில் ஏறி போஸ் கொடுத்த போரிஸ் ஜான்சன்.. பெண் எம்.பிக்களின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு பதில்!

புல்டோசரில் ஏறி போஸ் கொடுத்த போரிஸ் ஜான்சனின் செயலுக்கு கண்டனம் தெரிவித்திருந்த பெண் எம்.பிக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு பதிலளித்துள்ளார்.
புல்டோசரில் ஏறி போஸ் கொடுத்த போரிஸ் ஜான்சன்.. பெண் எம்.பிக்களின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு பதில்!
Published on
Updated on
1 min read

2 நாள் பயணமாக இந்தியா வந்திருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் புல்டோசரில் ஏறி போஸ் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.

இதற்கு இங்கிலாந்து பெண் எம்.பிகள் இருவர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்தியாவில் மனித உரிமை மீறப்படுவதாகவும், இஸ்லாமியர்களை குறி வைத்து அவர்களது வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்படும் நிலையில் அதற்கு ஆதரவு தெரிவிப்பது போல் போரிஸ் ஜான்சன் நடந்துக் கொண்டுள்ளதாக கூறியிருந்தனர்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு, உண்மை நிலைமை அறியாத இங்கிலாந்து பெண் எம்.பிகள் குறை கூறுவது சரியல்ல என்றும், பிரதமர் மோடி-யின் மகத்தான சாதனைகளை இழிவுபடுத்தும் எதிர்மறை பிரச்சாரங்களின் விளைவு தான் இது எனவும் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com