கரப்பான் பூச்சியிலிருந்து பீர் தயாரிக்க படுகிறதா என்பது அதிர்ச்சியை அளித்தாலும் அதுதான் உண்மை என கூறுகின்றனர். ஜப்பான் நாட்டில் மட்டுமே கரப்பான் பூச்சியிலிருந்து பீர் தயாரிக்கப்படுவதாக சொல்கின்றனர்.”கபுடோகாமா” எப்னப்படும் பாரம்பரிய முறைப்படி இதனை தயாரித்த பின்பு வடிக்கட்டப்பட்டு வருவதால் இந்த பீர் தனிச்சிறப்பு பெற்ற பீர் என அனைவராலும் கூறப்பட்டு வருகிறது.
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து இதனை ஜப்பானியர்கள் தயாரித்து குடித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு வருகின்றனர். இதனை ஜப்பானில் Insect sour ஆல்லது konchu sour என அழைக்கப்பட்டு வருகிறது.
நன்நீரில் உள்ள கரப்பான் பூச்சிகளை பிடித்து அவற்றை வெந்நீரில் வேகவைத்த பின்னர் இதனை மூன்று முதல் நான்கு நாட்கள் வரை ஊற வைக்கப்பட்டு பின்பு அதிலிருந்து வரும் சாறு பீராக மாற்றப்படுவதாக கூறுகின்றனர்.
இந்த கரப்பான் பூச்சி பீரின் விலை இந்திய மதிப்பில் ரூபாய் 450 என்பது குறிபிடத்தக்கது.