கலிபோர்னியா பகுதியில் மனிதர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விஷியங்கள் ஏராளமாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பல்வேறு முன்னேற்றங்கள் அடைந்து விட்ட போதிலும் கடல்வாழ் உயிரினங்கள் சில திடீரென தோன்றி மனிதர்களை ஆச்சரியபடுத்தி வருகின்றனர். அதனை பார்க்கையில் ஆழ்கடலில் அறிந்து கொள்ளும் விஷியங்கள் ஏராளமாக இருக்கின்றன என தோன்றும்.
அந்த வகையில் தற்போது வினோத தோற்றமுடைய பேரல் ஐ எனப்படும் அரிய வகை மீன் இனம் ஒன்று ஆய்வில் சிக்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.மாண்டேரி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் இந்த வகையான மீன் குறித்து ஆவணப்படுத்தியும் உள்ளனர்.
இந்த மீன் வகை ஒளி ஊடுருவக் கூடிய உடலமைப்பைக் கொண்டுள்ளதாகவும், பெரிய தலையை கொண்ட இந்த மீனின் கண்கள் பச்சை நிறத்தில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.மாண்டேரி பே அக்குவாரியம் ஆராய்ச்சி நிறுவனம், பசிபிக் பெருங்கடலின் ஆழத்திற்கு தொலைதூரத்தில் இருந்து இயக்க கூடிய வாகனம் ஒன்றை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பியுள்ளனர்.
இவ்வாகனம் சுமார் 650 மீட்டர் ஆழத்தில் இருக்கும் போது, பேரல் ஐ மீன் இருப்பதை வீடியோவாக பதிவு செய்துள்ளது. அதில் 9 முறை மட்டுமே அந்த மீன் தெரிவதாக சொல்லப்படுகிறது.
பேரல் ஐ மீன் தோன்றும் வீடியோவை மாண்டேரி பே அக்குவாரியம் ஆராய்ச்சி நிறுவனம் கடந்த வாரம் வலைதளங்களில் வெளியிட்டது. இவை ஒளி ஊடுருவக் கூடிய தலையை கொண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.இந்த மீனை பற்றிய மேலும் சில தகவல்களில் இதன் கண்கள் ஒளியை உணர்திறன் கொள்வதாகவும், மேல்பக்கம் மற்றும் தலைக்கு நேராக முன்னால் நிறுத்தி அதனால் பார்க்க இயலும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்
பீப்பாய் மற்றும் குழாய் வடிவத்தில் அதன் கண்கள் இருப்பதால் இந்த மீனிற்கு 'பேரெல் ஐ' என்று பெயரிடப்பட்டுள்ளது.