இந்தியாவிற்கு ஆதரவாக களத்தில் குதித்த அமெரிக்கா...என்ன செய்ய போகிறது சீனா?!!

இந்தியாவிற்கு ஆதரவாக களத்தில் குதித்த அமெரிக்கா...என்ன செய்ய போகிறது சீனா?!!
Published on
Updated on
1 min read

அருணாச்சல பிரதேசத்தில் தவாங் பகுதி அருகே இந்தியா மற்றும் சீன ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுப்படுத்தும் இந்தியாவின் முயற்சிகளுக்கு ஆதரவு அளித்துள்ளது அமெரிக்கா.

எல்லை மோதல்:

அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு வழியாக சீன ராணுவம் இந்தியாவிற்குள் நுழைந்தது.  இதனால் இந்திய மற்றும் சீன ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பல வீரர்கள் காயமடைந்தனர்.  மேலும் சீனப் படையினரின் இந்த திடீர் தாக்குதலுக்கு இந்தியாவிடமிருந்து தகுந்த பதில் அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.  இந்திய தரப்பில் இருந்து 20 வீரர்கள் காயம் அடைந்த நிலையில், காயமடைந்த சீன ராணுவ வீரர்களின் எண்ணிக்கை இதைவிட இரு மடங்கு எனக் கூறப்பட்டுள்ளது.

ஆதரவளித்த அமெரிக்கா:

அருணாச்சல பிரதேசத்தில் தவாங் பகுதி அருகே இந்தியா மற்றும் சீன ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுப்படுத்தும் இந்தியாவின் முயற்சிகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளது.  பென்டகன் பிரஸ் செயலாளர் பாட் ரைடர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.  அதில் "எங்கள் நட்பு நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருப்போம்.  நிலைமையைக் கையாண்ட விதத்தில் இந்தியாவின் முயற்சிகளை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.  

இந்தியா-சீனா எல்லையில் நடக்கும் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா கண்காணித்து வருகிறது.” என தெரிவித்துள்ளார்.   மேலும் “சீனா தனது படைகளை எல்லையில் திரட்டி எவ்வளவு சர்வாதிகாரமாக ராணுவ உள்கட்டமைப்புகளை உருவாக்குகிறது என்பதை உலகமே அறியும்” என்றும் கூறியுள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com