ஜப்பானில் மினி பேருந்து அளவிற்கு தோற்றமளிக்கும் வாகனம்,அவை சாலையில் ரப்பர் டயர்களிலும் அதனையே ரயில் தண்டவாளங்களில் பயன்படுத்தும் போது அவற்றின் எஃகு சக்கரங்கள் அதன் அடிவயிற்றில் இருந்து வெளிவந்து ரயில் தண்டவாளத்தில் இறங்கி ரயில் பெட்டியாகவும் மாற்றி இயங்கி வருகிறது.மேலும் அதற்கு DMV (Dual Mode Vehicle) என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த வகையான DMV ஆனது 21 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய வகையில் உருவாக்கப் பட்டுள்ளதாகவும் இவை ரயில் பாதைகளில் மணிக்கு 60 கிமீ வேகத்திலும் சாலைகளில் செல்லும் போது 100 கிமீ வேகத்திலும் இயங்கும் என ஆசா கோஸ்ட் ரயில்வே நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இது குறித்து ஆசா கோஸ்ட் ரயில்வே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில் மக்கள் தொகை குறைந்து வரும் கையோ போன்ற சிறிய நகரங்களுக்கு இந்த வாகனம் பெரிதும் உதவும் எனவும் அங்கு உள்ளூர் பேருந்துகள் அதிக லாபம் நீட்ட பல்வேறு முயற்சிகளை செய்து வருவதால், இந்த வாகனம் பொதுமக்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும் எனவும் அவர்களை பாதுகாப்பாக கொண்டு செல்லும் வாகனமாகவும் இருக்கும் என கூறிய ரயில்வே அதிகாரி இதில் பயணிக்கும் பயணிகளுக்கு தகுந்த பாதுகாப்பு மற்றும் உரிய நேரங்களில் சென்றடைய உதவியாக இந்த DMV வாகனம் இருக்கும் என தலைமை நிர்வாக அதிகாரி ஷிகேகி மியுரா கூறியுள்ளார்.