வந்துவிட்டது மஞ்சள் காய்ச்சல்...! தடுப்பூசி அவசியம்...! - பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை.

வந்துவிட்டது மஞ்சள் காய்ச்சல்...! தடுப்பூசி  அவசியம்...! - பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை.
Published on
Updated on
2 min read

ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் நோய் காணப்பட்டு வரும் நிலையில் வெளிநாடு செல்வோர் மற்றும் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வருவோர் மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever) தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் - பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை அறிவிப்பு

அந்த அறிவிப்பின்படி, ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்கா நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever) நோய்த்தாக்கம் காணப்படுகிறது. எனவே, மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever) நோய் பரவலை தடுக்க இந்தியாவிலிருந்து அந்நாடுகளுக்கு செல்வோர் மற்றும் அந்நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வருவோர் மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever) தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். 

மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி (Yellow Fever Vaccine) செலுத்திக் கொண்ட பத்து நாட்களுக்கு பிறகே மேற்கண்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள அல்லது மேற்கண்ட நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வர அனுமதிக்கப்படுவர். இது விமான நிலையங்களில் சான்றிதழ் (Yellow Fever Vaccination Certificate) மூலம் கண்காணிக்கப்படுகிறது.


1. பன்னாட்டு தடுப்பூசி மையம் மற்றும் கிங் நோய்த்தடுப்பு ஆராய்ச்சி நிலையம், கிண்டி.

செவ்வாய் -  10.00 மணி முதல் 12.00 மணி வரை  ( ivcatking@gmail.com  /  www.kipmr.org.in  ) என்ற இணையதளத்தில் பதிவு செய்யது தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். 

நேரடி பதிவு நேரம்: செவ்வாய் மற்றும் வெள்ளி 9.30 மணி முதல் 10.00 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படும். 

2. துறைமுக சுகாதார நிறுவனம். இராஜாஜி சாலை, சென்னை  - 

திங்கள் மற்றும் புதன் 9.30 மணி முதல்12.30 மணி வரை இணையத்தில் இந்த முகவரியில் பதிவு செய்து தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் ( quarantinechennai@yahoo.com  pho.chn-mohfw@gov.in 

நேரடி பதிவு நேரம்: திங்கள் மற்றும் வெள்ளி 8.00 மணி முதல் 9.00 மணி வரை செலுத்தப்படும். 


3. துறைமுக சுகாதார அதிகாரி,  துறைமுக சுகாதார அமைப்பு எண்.பி-20, உலக வர்த்தக அவென்யூ, புதிய துறைமுகம், தூத்துக்குடி.


செவ்வாய்:    11.00 மணி முதல் 01.00 மணி வரை இணையதள பதிவு முகவரியில் பதிவு செய்து தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் ( photuticorin@gmail.com ). 

நேரடி பதிவு நேரம்:   செவ்வாய் 10.00 மணி முதல் 11.00 மணி வரை செலுத்தப்படும். 

தமிழ்நாட்டில் குடியுரிமை பெற்ற ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு பயணம் செய்ய விரும்புவோர் மேற்கண்ட இடங்களில் உள்ள தடுப்பூசி மையங்களை அணுகி, தடுப்பூசி செலுத்திக் கொண்டு சான்றிதழ் பெற்று பயணம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேற்கண்ட மூன்று இடங்களைத் தவிர, தமிழ்நாட்டில் வேறு எந்த இடத்திலும்  மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com