உலக தாய் மொழி நாளும் அரசியல் ஆளுமைகளின் ட்வீட்டர் பதிவுகளும் !!!!

உலக தாய் மொழி நாளும் அரசியல் ஆளுமைகளின் ட்வீட்டர் பதிவுகளும் !!!!
Published on
Updated on
2 min read

உலக தாய் மொழி நாள் :

உலகிலேயே இரண்டே மொழிகளில்தான் "ழ"கரம் உண்டு. ஒன்று தமிழ், இன்னொன்று மலையாளம். தமிழுக்குக் கூடுதல் சிறப்பு என்னவென்றால் மொழியின் பெயரிலேயே "ழ"கரம் இருக்கிறது. "ழ"கரத்தை மற்ற மொழிகளில் எளிதாக எழுதவோ, பேசவோ முடியாது. ஆங்கிலத்தில் "ழ"வை "ZHA" என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் அதை உச்சரித்துப் பாருங்கள். "ழ" என்ற ஒலி வராது.

தமிழ் வாழியவே
செம்மொழியான செந்தமிழில் செழுமை எனும் கூட்டுக்கிணங்க இன்றைக்கு உலகம் முழுவதும் தாய் மொழி நாள் கொண்டாடப்படுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

தாய்மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம் - உயிர்!
உயிர் கொடுத்து உயிர் காத்த இனம், நம் தமிழினம்!

தொன்மையும் காலத்துக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனும் ஒருங்கே பெற்ற நம் தாய்மொழியாம் தமிழைக் காப்போம்! தமிழின் உயர்வை நானிலமும் நவிலச் செய்வோம்! - முதலமைச்சர் தாய் மொழி நாளை முன்னிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வாழ்த்து

மனிதரின் சிந்தனையைத் தீர்மானிப்பது அவரது தாய்மொழியேயாம். எத்தனை மொழிகளும் தத்தம் விருப்பத்தில் கற்றுக்கொள்ளலாம். அத்தனையிலும் அன்னை போல் இருப்பதால்தான் ஒரு மொழிக்கு மாத்திரம் தாய்மொழி என்று பேர். சிந்திப்பதை சொல்லில் வெளிப்படுத்தும் அனைவருக்கும் உலகத் தாய்மொழி நாள் வாழ்த்துகள்  என பதிவிட்டுள்ளார்.

வைகை செல்வன் பதிவு

 தன்  கையோ தனக்கு உதவியில்லை தமிழர்களே இங்கு தமிழ் பேசவில்லை வாழ்க 
 உலக தாய் மொழி நாள்  என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் ட்விட்டரில் பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

கவிஞர் வைரமுத்துவின் வாழ்த்துச்செய்தி

ஈடு இணையில்லா
இன்ப மொழி
உலகெங்கும் வாழும் தமிழர்களின்
உயிர் மொழி
தொன்மைவாய்ந்த தனிப்பெரும் நம் #தாய்த்தமிழ்மொழி வாழ்க! வாழ்க!

உலகத் தமிழர்களுக்கும், 
உயிராய் தமிழை நேசிப்பவர்களுக்கும் என் #உலக_தாய்மொழி_தினம் வாழ்த்துகள் - விஜயபாஸ்கர்  முன்னாள் அமைச்சர்


எழுத்தும் நீயே
சொல்லும் நீயே
பொருளும் நீயே
பொற்றமிழ்த் தாயே

அகமும் நீயே
புறமும் நீயே
முகமும் நீயே
முத்தமிழ்த் தாயே

மாறும் உலகில் மாறாதியங்கும்
மாட்சி படைத்தனை நீயே

உனக்கு வணக்கம் தாயே - எம்மை
உலக மாந்தராய்
உய்யச் செய்வாயே

(இன்று உலகத்
தாய்மொழித் திருநாள்) என  தெரிவித்திருக்கிறார் கவிஞர்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com