மகளிர் உரிமை மாநாடு: கே.எஸ்.அழகிரி ஆதரவாளர்கள் சாலை மறியல்

மகளிர் உரிமை மாநாடு:  கே.எஸ்.அழகிரி ஆதரவாளர்கள் சாலை மறியல்
Published on
Updated on
1 min read

சென்னை விமான நிலையம் அருகே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆதரவாளர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இன்று திமுக மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் மாநாட்டில்  பங்கேற்பதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று இரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

சென்னை வந்தடைந்த அவர்களை வரவேற்கும் விதமாக காங்கிரஸ் சார்பில் கிண்டி கத்திப்பாரா சாலை ஓரத்தில்  காங்கிரஸ்  கொடிகள் கம்பங்களில் நடப்பட்டது.

கொடி கம்பங்கள் நடுவதற்கு உரிய அனுமதி இல்லை எனக் கூறி காவல் துறையினர் கம்பங்களை அகற்ற முற்பட்டபோது காங்கிரஸ் தமிழக மாநில தலைவர் கே எஸ்  அழகிரி அவரது ஆதரவாளர்கள் சிலர்  காவலர்களிடையே  காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கிண்டி பிரதான சாலையில் வாகனங்களை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com