ஆஸ்ரமத்திற்கு நிதி கேட்டு வீணாக தகராறில் பெண்கள் ஈடுப்பட்டதால் பரபரப்பு
வந்தவாசி பகுதிகளில் ஆஸ்ரமத்திற்கு நிதி கேட்டு பெண் ஒருவர் வீணாக தகராறில் ஈடுபட்டு பணம் கேட்டு மிரட்டலாக பேசி அடிக்க முற்பட்டால் பரபரப்பு.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகர் புற பகுதிகளில் பெண் ஒருவர் ஆஸ்ரமத்திற்கு நிதி கேட்டு வீணாக தகராறில் ஈடுபட்டு மிரட்டலாக பேசி அடிக்க முற்பட்டால் பரபரப்பு ஏற்பட்டது
கவர்மெண்ட் ஆஃப் இந்தியா என அடையாள அட்டை
தனியார் சாரிடபிள் டிரஸ்ட் திருவேற்காடு
ஆஸ்ரம நிர்வாகி என கூறிக் கொண்டு வந்தவாசி பகுதியில் பத்துக்கு மேற்பட்ட பெண்கள் வசூல் செய்து வந்தனர்.இதில் வந்தவாசி தேரடி பகுதியில் நிதியுதவி வசூல் செய்ய வந்த பெண் ஒருவர். தனது கழுத்தில் கவர்மெண்ட் ஆஃப் இந்தியா என அடையாள அட்டையுடன் பல்வேறு நபர்களை மிரட்டி பணம் வசூலில் ஈடுபட்டார்.
மேலும் இந்தப் பெண் தேரடி பகுதியில் சிலரிடம் மிரட்டலுடன் பணம் கேட்டு அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆஸ்ரம நிர்வாகியான பெண்ணுக்கும் பொதுமக்களும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அச்சுறுத்தி பணம் கேட்டு மிரட்டல்
இதையடுத்து தகவல் அறிந்த போலீசார் நேரடியாக சென்று ஆஸ்ரம நிர்வாகியான பெண்ணை பிடித்து விசாரணை செய்ததில் அந்த பெண் போலீஸாருக்கு எந்தவித ஒத்துழைப்பு தரவில்லை.
பின்னர் போலீசார் விசாரணை செய்ததில் பெண் வைத்திருந்த அடையாள அட்டையில் சுந்தரவல்லி என்று பெயர் இருந்தது பின்னர் போலீஸார் ஆஸ்ரம நிர்வாகியான சக பெண்களுடன் பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
ஆஸ்ரம நிர்வாகி என அரசு அங்கீகார அட்டையை கழுத்தில் அணிந்து கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி பணம் கேட்டு மிரட்டல் விடுத்த பெண்ணால் வந்தவாசி தேரடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.