சென்னை விமான நிலையத்தில் உலக புடவைகள் தினத்தை முன்னிட்டு இந்திய கலாச்சார புடவைகளை அணிந்து வந்த பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
சென்னை விமான நிலைய கல்யாண்மாயி பெண்கள் நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் உலக புடவைகள் தின விழா ஆணையக மண்டபத்தில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் 8 வயது சிறுமி முதல் 60 வயது வரை உள்ள பெண்கள், மாற்று திறனாளிகள், திருநங்கை உள்பட 150 பேர் பங்கேற்றனர்.
இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் கட்டப்படும் 75 விதவிதமான புடவைகளை அணிந்து வந்தனர். மேலும், நிகழ்ச்சியில் சேலை அணிந்து வந்த பெண்கள் மேடையில் RAMP WALK செய்தனர்.
இப்படி புடவைகள் அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு விமான நிலைய இயக்குனர் சரத்குமார் மற்றும் இந்தியன் ஆயில் கார்பரேசன் பொது மேலாளர் பீனா காந்தி பரிசுகளை வழங்கினார்.
பொதுவாக, பெண்கள் புடவை அணிந்தாலே தனி அழகு . அதுவும் இன்று கொண்டாடப்படும் உலக புடவைகள் தினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்கள் புடவை அணிந்து வந்தது பார்ப்பதற்கே அழகாக இருந்தது.