காப்புக்காடு வனப்பகுதியில், காட்டுப் பன்றியை வேட்டையாடி இறைச்சியை விற்பனை செய்த 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமடை காப்புக்காடு வனப்பகுதியில் வனத்துறையிர் ரோந்து சென்று கொண்டிருந்தனார். அப்போது, காட்டு பன்றியை வேட்டையாடி இறைச்சியை விற்பனை செய்து கொண்டிருந்த நான்கு பேரை வனத்துறையிர் கையும் களவுமாக கைது செய்தனர். அத்துடன், அவர்களிடமிருந்து, 50 கிலோ காட்டுப் பன்றி இறைச்சியை பறிமுதல் செய்தனர்.
-நப்பசலையார்