அனைத்து அரசு  நூலகங்களுக்கு வைஃபை வசதிகள் ...!!!

அனைத்து அரசு  நூலகங்களுக்கு வைஃபை வசதிகள் ...!!!
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் உள்ள அரசு நூலகங்களில் வைஃபை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், அந்தியூர் பகுதியில் உள்ள நூலகத்தில் வைஃபை வசதி ஏற்படுத்தித் தரப்படுமா எனவும், கம்பம் தொகுதியில் உள்ள நூலகங்கள் சிதலமடைந்துள்ளதால் அதனை புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா எனவும் சட்டமன்ற உறுப்பினர்கள் கே ஜி வெங்கடாசலம் மற்றும் கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்காக  அரசு நூலகங்களில் கடந்த ஜனவரி மாதம் முதல் முதற்கட்டமாக 500 நூலகங்களில் வைஃபை வசதி அமைக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டாம் கட்டமாக அனைத்து அரசு  நூலகங்களுக்கு வைஃபை வசதிகள் அமைக்கப்படும் எனவும் கூறினார்.

மேலும், சட்டமன்ற உறுப்பினர்களின் நிதியிலிருந்து சிதிலமடைந்த புதிய நூலகம் அமைப்பதற்கு முதலமைச்சருடன் கலந்தாலோசித்து அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com