முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக சென்னை வடபழனியில் உள்ள ஆயிரம் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி நகர் சத்தியா தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகை கஸ்தூரி பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது மேடையில் பேசிய அவர்;
"அதிமுகவில் நான் உறுப்பினர் அல்ல. ஆனால், எனக்கு ஓட்டுரிமை வந்ததிலிருந்து நான் அதிமுகவிற்கு தான் ஓட்டு போட்டு வைக்கிறேன்", என்றார். மேலும்,
விஜயகாந்த் கட்சி தொடங்கிய போது ஒரே ஒரு முறை அவருக்கு வாக்களித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பெண் குழந்தைகள் கல்லூரி படிப்பை தொடருவதற்கான திட்டத்தை முதலில் துவக்கி வைத்ததும், தாலிக்கு தங்கம், அம்மா உணவகம் போன்ற நலத்திட்டங்களைத் தொடக்கி வைத்தவரும் ஜெயலலிதா தான் என்றும் குறிப்பிட்டார்.
பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்த ஜெயலலிதா தற்போது நம்முடன் இல்லை அவர் தெய்வமாகிவிட்டார் அவரை நாம் தெய்வமாக வணங்க வேண்டும் எனவும், கட்சியை பார்த்து நலத்திட்ட உதவிகள் வழங்காமல் தேவையை அறிந்து உதவி வழங்குவது அதிமுகவின் சித்தாந்தத்தில் உள்ளது என்றும் புகழாரம் சூட்டினார்.
மேலும், மதுபான கடைகளை அகற்ற வேண்டும் என்று கட்சியை கடந்து தான் நிறைய விமர்சித்துள்ளதாகவும்,
திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுவை வழங்கலாம் என்று இப்போதுள்ள அரசு அறிவித்துள்ளதெனவும், அதை திமுக கட்சிக்காரர்களே விமர்சித்த பிறகு அந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் வாபஸ் வாங்கவில்லை. ஆகவே மக்கள் விழிப்புணர்வோடு இருந்தால் தான் இந்த மாதிரி அநியாயங்களை நிறுத்த முடியும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "கடலில் பேனா சிலை வைப்பது பெரிது அல்ல, ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குழந்தைகள் பேனாவை கையில் பிடிக்க வேண்டும், கலைஞரை நினைவு கூற வேண்டும் என்றால் நூலகங்கள் அமைக்கலாம். அதை விட்டுவிட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் மிகவும் கடலில் பேனா வைக்கிறீர்கள் பேனாவை உங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாமே", என்று விமர்சித்தார்.
மேலும், சினிமாவில் வேலை செய்பவர்களுக்கு தெரியும் எந்த நேரத்திலும் வேலை செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஏற்ற வசதிகளை செய்து கொடுத்து விடுவார்கள். அப்படி இருக்கும் பொழுது கூட அங்கு வேலை செய்வது எவ்வளவு கடினம் என்று . அப்படி இருக்கும் பொழுது தொடர்ச்சியாக ஓய்வு இல்லாமல் 12 மணி நேரம் தொழிலாளர்களால் வேலை செய்ய முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, "நான்கு நாட்கள் பட்டினியாக இருந்துவிட்டு மூன்று நாட்கள் சேர்த்து சாப்பிட முடியுமா ..? அதைப் போலத்தான் இருக்குறது அரசாங்கத்தின் 12 மணி நேர வேலை திட்டமும் . மேல்மட்ட சொகுசு வேலை பார்ப்பவர்களுக்கு இது மிக கடினமான வேலை திட்டம் சாதாரண மக்களுக்கு எப்படி இந்த திட்டம்
பயனளிக்கும் ?", எனக் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிக்க ] மதுவிற்பனையில் ஈடுபட்ட கடையை சூறையாடிய பெண்கள்...!!