"அண்ணா குறித்து அண்ணாமலை பேசியது உண்மையல்ல" டிடிவி தினகரன் பேச்சு!

"அண்ணா குறித்து அண்ணாமலை பேசியது உண்மையல்ல" டிடிவி தினகரன் பேச்சு!
Published on
Updated on
1 min read

அண்ணா குறித்து அண்ணாமலை பேசியது முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

தந்தை பெரியாரின் 145 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலை சிம்சன் பகுதியில் இருக்கக்கூடிய அவரின் சிலைக்கு அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவ படத்திற்கு மரியாதை செலுத்தி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன், "பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்தநாள்.தமிழ்நாட்டில் சமூக நீதியை பாதுகாத்து அதற்காக போராடியவர். அண்ணா விவரத்தில் அண்ணாமலை உண்மைக்கு புறம்பான தகவலை சொல்லி உள்ளார். 1957 இல் காங்கிரஸ் ஆட்சியில் அந்த சம்பவம் நடந்தது.அண்ணா முதல் முறையாக தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து விளக்க பொதுக்கூட்டம் மதுரையில் நடந்தது. பி டி ஆர் மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம் நடத்தியதில் முக்கிய பங்கு ஆற்றினார். பெரிய அளவில் நடந்தது. அங்கு அழைக்கப்பட்டதால் அண்ணா அக்கூட்டத்தில் பேசினார். அண்ணா அங்கு நாத்திகம் பேசியதால் தேவர் கண்டித்து பேசினார் இருவரில் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை என தெரிவித்தார். 

கோவில் நிகழ்ச்சியில் பேரறிஞர் அண்ணா, பேசிய போது இருந்தவரும் அடுத்த தேவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவர் பேசிய போதும் இருந்தவருமான ஒருவரின் மகன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தற்போது உள்ளார்.  இதுகுறித்து அந்த சமயத்தில் அந்த இடத்தில் இருந்தவரிடம், நான் அண்ணாமலை பேசியது குறித்து தெரிந்ததும் தொலைபேசி வாயிலாக கேட்டேன், அவர் அப்போது மதுரை கல்லூரியில் படித்தவர். சொந்த ஊர் அபிராமாபுரம், தேவரின் நெருங்கிய பங்காளி . அவருக்கு 85 வயது திட காத்திரமாக உள்ளார். அந்த பெரியவரிடம் நான் கேட்டபோது அண்ணாமலை கூறியது போல எதுவும் அன்று நடக்கவே இல்லை என கூறினார். அப்போது தேவர் மன்னிப்பையும் எதிர்பார்க்கவில்லை அண்ணா மன்னிப்பு கேட்க வேண்டிய இடத்திலும் இல்லை' எனக் கூறினார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com