சின்னத்தை முடக்க நான் காரணமாக மாட்டேன்...பேச்சுவார்த்தைக்கு தயார்...ஓபிஎஸ் பேச்சு!

சின்னத்தை முடக்க நான் காரணமாக மாட்டேன்...பேச்சுவார்த்தைக்கு தயார்...ஓபிஎஸ் பேச்சு!
Published on
Updated on
1 min read

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக நாங்கள் போட்டியிடுகிறோம் என ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுவோம் :

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல், அடுத்த மாதம் 27-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, உச்சக்கட்ட பரபரப்பில் அரசியல் கட்சிகள் உள்ளன. இந்த நிலையில் சென்னை, பசுமைவழிச்சாலையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுகிறோம் என அதிரடியாக அறிவித்தார்.

சின்னத்தை முடக்க நான் காரணமாக இருக்க மாட்டேன் :

ஒன்றரை கோடி தொண்டர்களால் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக  தேர்ந்தெடுக்கப்பட்ட தமக்கு, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முழு உரிமை உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். மேலும் இரட்டை இலை சின்னம் கோரி A மற்றும் B பார்மில் கையொப்பம்  இடுவேன் எனவும், இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதற்கு காரணமாக நான் இருக்க மாட்டேன் என்றும், அப்படி முடக்கப்படும் சூழ்நிலையில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக கூறினார்.

பாஜகவுக்கு முழு ஆதரவு :

ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக போட்டியிடும் பட்சத்தில் தேசிய கூட்டணி கட்சி என்ற முறையிலும், வருகிற நாடாளுமன்ற தேர்தலை ஒட்டியும் அதற்கு முழு ஆதரவு தெரிவிப்போம் என பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு தாயார் :

அதிமுக பழைய நிலைக்கு திரும்பும் வரை சட்டப் போராட்டம் தொடரும் எனவும், அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் எடப்பாடி பழனிசாமி தரப்புடன் இணைந்து செயல்படுவது குறித்த பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com