அம்மா உணவகங்கள் எதையும் நாங்கள் முழுமையாக புறக்கணிக்கவில்லை.தேவை இல்லாமல் அம்மா உணவகங்களை மூடவில்லை.உணவகங்கள் செயல்பட்டு கொண்டு தான் இருக்கிறது என இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
ஆக்கிரமைப்பு செய்த இடம் மீட்பு :
சென்னை : ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட வால்டாக்ஸ் சாலையில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு நாடக கொட்டாயாக பயன்படுத்தி வந்த இடத்தை தற்பொழுது ஆக்கிரமிப்பு செய்தவர்களிடமிருந்து சென்னை மாநகராட்சி மீட்டெடுத்துள்ளது அந்த இடத்தையும், அதனைத் தொடர்ந்து மண்ணடி அங்கப்பன் நாயக்கன் தெருவில் உள்ள உருது பள்ளி அருகே இருக்கக்கூடிய ஆக்கிரமிப்பு இடத்தையும் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
சேகர் பாபு பேட்டி :
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான பாரம்பரியமிக்க 13681 சதுர அடி உள்ள நாடக கொட்டகையை சென்னை மாநகராட்சி மீட்டுள்ளது. அந்த இடத்தை நாடக கொட்டாயாக பயன்படுத்தி வந்த போது அண்ணா, கருணாநிதி, எம் ஜி ஆர், எம் ஆர் ராதா என அனைத்து நடிகர்களும் நாடகம் நடத்த பயன்படுத்திய இடம் எனவும் பல சட்ட போராட்டத்திற்கு பிறகு அந்த இடம் தற்பொழுது சென்னை மாநகராட்சி மீட்கப்பட்டுள்ளதாகவும், அந்த இடத்தை மீண்டும் எதற்காக பயன்படுத்தப்படும் என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், அங்கப்பன் நாயக்கன் தெருவில் உள்ள உருது பள்ளிக்கு அருகில் 1400 சதுர அடியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த மாநகராட்சிக்கு சொந்தமான இடம் மீட்கப்பட்டுள்ளது. அருகே இருக்கக்கூடிய உருது பள்ளியில் 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருவதால் அங்கு போதுமான இடவசதி இல்லாததால் மீட்கப்பட்ட இடத்தில் உருது பள்ளிக்கு கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டித் தரப்படும் என்றார். மேலும், மீட்கப்பட்ட இரண்டு இடங்களும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு தேவையாக இருக்கும், தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் எங்கு இருந்தாலும் மீட்டெடுக்கபடும் என தெரிவித்தார். விக்டோரியா கட்டிடம் பழமை மாறாமல் சீரமைக்க வேண்டும் என்பதற்காக அதன் சீரமைக்கும் பணி முடிவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. மாநகராட்சிக்கு போதுமான நிதி இல்லை என்றாலும் முதலமைச்சர் மாநகராட்சிக்கு தேவையான நிதியை அதிகளவிலேயே ஒதுக்கி வருகிறார்.
மேலும் தெரிந்து கொள்ள | மாலை முரசு செய்தியின் எதிரொலி ...நன்றி தெரிவித்த பொது மக்கள்...
காசி தமிழ் சங்கமத்திற்கு அழைப்பு இல்லை :
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை நிதி உதவியில் யாரும் அனுப்பவில்லை, காசி தமிழ் சங்கமத்திற்கு இந்து சமய அறநிலையத்துறைக்கு எவ்வித அழைப்பும் வரவில்லை என்றார். எந்த ஒரு துறை மிக சிறப்பாக செயல்படுகிறதோ அந்த துறையை தான் குறை சொல்வார்கள்.எங்களை போற்றுபவர்களையும் தூற்றுபவர்களையும் நாங்கள் ஒன்றாக தான் கருதுகிறோம் என்றார்.