வழக்கு ஒத்திவைப்பு
தமிழ்நாட்டில் ஜனவரி 1 முதல் 17ஆம் தேதி வரை விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் யாத்திரை நடத்த அனுமதி கோரிய திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநில இணைச்செயலர் பரத் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனு சார்ந்த வழக்கை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
விழிப்புணர்வு யாத்ரா
அதில், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் வேண்டுதல் மற்றும் விரதத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு யாத்ரா தென் தமிழகத்தில் ஜனவரி 1 முதல் 17 ஆம் தேதி வரை திருச்சி மலைக்கோட்டை பகுதியில் யாத்திரையைத் தொடங்கி சமயபுரம், சுவாமிமலை, திருத்துறைப்பூண்டி, ராமநாதபுரம், திருமங்கலம், பொள்ளாச்சி, திண்டுக்கல் வழியாக மீண்டும் திருச்சி விராலிமலையில் முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டது.
கால அவகாசம்
இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர். எனவே, காவல்துறையினர் உத்தரவை ரத்து செய்து பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டும் என மனுதாரர் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதையடுத்து நீதிபதிகள் வழக்கை ஜனவரி 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.