"வாகன வரி உயர்வு; அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்" - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிக்கை

Published on
Updated on
1 min read

வாகன வரி உயர்வு சட்டத்தை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத்த தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டதாவது;- "தமிழகஅரசுவாகனவரிஉயர்வுசட்டத்தை  மறுபரிசீலனை செய்யவேண்டும்" 
 
இருசக்கரவாகனங்கள், கார்கள், ஆம்னிபேருந்துகள், பயணியர்போக்குவரத்து வாடகை வாகனங்கள், சரக்குவாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் வரியை உயர்த்துவதற்கான சட்டமசோதாவை போக்குவரத்துத்துறை அமைச்சர் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்து நிறைவேறியிருப்பது எளியமக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் வரி உயர்வு சட்டமாகும்.

வாகன விலையில் சுமார் 5% அதிகரிக்கும் அளவிற்கு வரியேற்றம் என்பது நேரிடையாகவும், மறைமுகமாகவும் எளிய நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கும் செயல் என்பதை தமிழக அரசு உணர வேண்டும். அரசின் நிதி நெருக்கடியால், தொடர்ந்து வரிகளை உயர்த்தும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டாலும் போக்குவரத்துத்துறையில் சரக்கு வாகனங்கள் மீதான வரிகள், பொருட்களின் விலையேற்றத்திற்கு காரணமாக அமைந்து எளிய மக்களின் வாங்கும் திறனை மேலும் குறைத்து விடும்.

பொருளாதாரசிக்கல்களைசமாளிப்பதற்குவரிஉயர்வுஒன்றுதான்தீர்வுஎனசிந்திக்காமல், திறமைவாய்ந்தபொருளாதாரநிபுணர்களின்ஆலோசனைக்கேற்பதொழில்துறைமேம்பாடு, அந்நியமுதலீடுகள், கிரானைட், குவாரிகளை அரசு ஏற்று நடத்துதல் உள்ளிட்ட மாற்று சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

சுற்றுலா மற்றும் ஒப்பந்த வாகனங்களுக்கு காலாண்டு வரி ரூ.4,900 ஆகவும், பயணிகள் போக்குவரத்து, வாடகை வாகனங்களுக்கு 5 ஆண்டு வரியாக ரூ.1,400 முதல் ரூ.6 ஆயிரம் வரையும், கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் பேருந்துகள் உட்பட உயர்த்தப்பட்ட வாகன வரியானது பெரும் சுமையாகும்.

எனவே, எளிய மக்கள் மீதான சுமையினை உணர்ந்து தமிழக அரசு உடனடியாக வாகனவரி உயர்வுசட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அகில இந்திய சமத்துவமக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com