வேதாரண்யம் : காற்று நிரப்பப்பட்ட ரப்பர் படகு கரை ஒதுங்கியது - போலீசார் தீவிர விசாரணை

வேதாரண்யம் அடுத்த முனாங்காட்டில் காற்று நிரப்பப்பட்ட ரப்பர் படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இதனால் தீவிரவாதிகள் அல்லது மர்ம நபர்கள் யாரேனும் ஊடுருவி உள்ளார்களா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம் : காற்று நிரப்பப்பட்ட ரப்பர் படகு கரை ஒதுங்கியது - போலீசார் தீவிர விசாரணை
Published on
Updated on
1 min read

ரப்பர் படகு : 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த முனாங்காடு பகுதியில் இன்று காலை காற்று நிரப்பப்பட்ட ரப்பர் படகு ஒன்று கரை ஒதிங்கியுள்ளது. கரை ஒதுங்கிய படகு 13 அடி நீளம் ,3 அடி அகலம் கொண்டுள்ளது. இதில் இலங்கையில் பயன்படுத்தப்படும் வாட்டர் பாட்டில்கள், படகு துடுப்புகள், லைப் ஜாக்கெட், டிராவல் பேக், ஒரு ஜோடி காலணிகள் ஆகியவை இந்த படகில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. 

காவல்துறை நடவடிக்கை : 

தகவலறிந்து வந்த நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், கப்பற்படை அதிகாரிகள், கடற்கரையில் ஒதுங்கியுள்ள படகை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நாகையிலிருந்து மோப்ப நாய் ஒன்று சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, படகை மோப்பம் பிடித்துவிட்டு, பின் அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குள் நுழைந்து ஓடியது. 

அதனால் அந்த ரப்பர் படகில் இலங்கையிலிருந்து மர்ம நபர்கள் வேதாரண்யத்தில் ஊடுருவி உள்ளார்களா அல்லது கடத்தல்காரர்கள் நுழைந்துள்ளார்களா, படகில் தங்கம் கடத்தி வரப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com