3 வது நாளாக தொடரும் ஊழியர்கள் போராட்டம்...! பசியால் தவிக்கும் விலங்குகள்..!
வண்டலூர் பூங்காவில் 3 வது நாளாக தற்காலிக ஊழியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உரிய நேரத்தில் விலங்குகளுக்கு உணவு வழங்க முடியாமல் பூங்கா நிர்வாகம் திணறி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பயோமெட்ரிக் முறை, பணி நிரந்தரம், ஊழியர்களிடம் அவமரியாதையாக நடந்து கொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை சுமார் பத்து மணி நேரம் உள்ளிருப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர், தொடர்ந்து இன்று 3 வது நாளாக ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்த வராததால் தொடர் போரட்டம் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே விலங்குகளுக்கு உணவு அளிப்பது, விலங்குகளை பராமரிப்பது, பூங்காவை சுத்தம் செய்வது போன்ற பணிகளுக்கு 219 ஒப்பந்த ஊழியர்களும் 45 பேர் நிரந்தர பணியாளர்களாகவும் வண்டலூர் பூங்காவில் பணிபுரிந்து வந்தனர். இதற்கிடையே கடந்த மூன்று நாட்களாக ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால் பூங்காவில் உள்ள விலங்குகளை பராமரிக்க முடியாமலும், உரிய நேரத்தில் உணவு அளிக்க முடியாமலும் பூங்கா நிர்வாகம் தவித்து வருகிறது. இதனால் பூங்காவில் உள்ள விலங்குகள் பசியின் காரணமாக உயிரிழப்பு ஏற்படும் அபாய நிலையில் உள்ளதாக விலங்கு நல ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிக்க : மனைவியின் சகோதரியை கொலை செய்த நபர்..! ஆயுள் தண்டனை குறைப்பு...!