அண்ணாமலை சிறீ வரும் சிங்கம். அவரை தடுத்து நிறுத்தும் சக்தி யாருக்கும் இல்லை என ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பதவியேற்கவுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
பெருமையாக:
"நான் எங்கு சென்றாலும் நான் ஒரு ஆர்எஸ்எஸ்காரன் என்பதை பெருமையாகச் சொல்வேன் : தமிழர்களின் பெருமையை உலகறிய செய்யும் விதமாக நான் பணியாற்ற அனைவரின் அன்பும் பிரார்த்தனையும் தேவை " என சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
பாராட்டு விழா:
ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பொறுப்பேற்கவுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாஜக சார்பில் சென்னை தியாகராய நகர் பசும்பொன் தேவர் திருமண மண்டபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
பங்கேற்றோர்:
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை , அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் , பாமக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி , தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் , புரட்சி பாரதம் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி , இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் , இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் தேவநாதன் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அடுத்தநிலைக்கு:
பாஜக தொண்டன் எனும் நிலையிலிருந்து பரிணாம வளர்ச்சியாக , அடுத்த நிலைக்கு செல்கின்றேன் எனக் கூறியுள்ளார் சி.பி.ராதாகிருஷ்ணன். இல.கணேசன் , தமிழிசை , சி.பி. ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் கட்சிப்பணியை விட்டுச் செல்கின்றனரே என பலர் கேட்கின்றனர் எனவும் ஆனாலும் நாங்கள் சென்றாலும் தமிழக பாஜக மகத்தான இயக்கமாக தனது பயணத்தை தொடர்ந்து புதிய சிகரங்களை பாஜக தொடும் எனப் பேசியுள்ளார்.
சீறிவரும் சிங்கம்:
மேலும் அண்ணாமலையின் தலைமை அப்படிப்பட்டதாக இருக்கிறது எனவும் அண்ணாமலை எனும் சீறி வரும் சிங்கத்தை தடுத்து நிறுத்தும் சக்தி எவருக்கும் இல்லை எனவும் கூறியுள்ளதோடு
அண்ணாமலை நேற்றுவரை தலைவராக இருந்தார் என்றும் இன்று என் தம்பியாக மாறி உள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.