’’உதயநிதி ஸ்டாலின் ஒரு எல் போர்டு...! ’’ - அதிமுக முன்னாள் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன்.

 
’’உதயநிதி ஸ்டாலின் ஒரு  எல் போர்டு...! ’’  -  அதிமுக முன்னாள் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன்.
Published on
Updated on
1 min read

அரியலூர், ஆயிரங்கால் மண்டபம் அருகில் அதிமுக சார்பில் மே தின பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளரும் முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக முக்கிய பேச்சாளர்கள் மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் நாட்டில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எங்கு இருக்கிறது என்பதை நாம் பார்க்க முடியவில்லை, ஏனென்றால் அந்த நோட்டுகள் எல்லாம் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் தான் உள்ளது எனக் கூறினார்.

இந்த ஆட்சி ஐந்து வருடம் நிறைவு செய்யப் போவதில்லை, என்றைக்காவது ஒரு நாள் இந்த ஆட்சி கலைக்கப்படும் என யோசிக்கும்  தற்போதுள்ள அமைச்சர்கள் எப்படி எல்லாம் சம்பாதிக்க வேண்டும் என்பதை இரவு பகல் பாராமல் திட்டம் தீட்டிக் கொண்டு,  நாட்டு மக்களின் பணத்தை கொள்ளையடித்து விட வேண்டும்; இல்லையென்றால் நாம் ஏமாந்து விடுவோம்,... என நினைத்து நாட்டு மக்களை சந்திக்காமல் தொழில் அதிபர்களை மட்டுமே சந்திக்கின்றனர் என்றும் சாடினார். 

மேலும், இதன் மூலம் ஒவ்வொரு அமைச்சர்களும் பல கோடிக்கு அதிபதிகளாக உள்ளனர் எனவும், நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கு என்னென்ன வழி இருக்கிறது; எவ்வாறு நாட்டு மக்களின் பணத்தை கொள்ளையடிக்க வேண்டும் என்று சிந்திக்கும் அரசாக மு.க.ஸ்டாலின் அரசு உள்ளது எனவும் கூறினார்.

அதனைத்தொடர்ந்து,  உதயநிதி ஸ்டாலின் ஏதோ 50 ஆண்டு அரசியல்வாதிபோல பேசிக் கொண்டிருக்கிறார், ஆனால், அவர் அரசியலில் ஒரு எல் போர்டு எனவும் விமர்சித்தார். அதோடு, உதயநிதி ஸ்டாலின் வந்தவுடன் அமைச்சர் பதவி துணை முதலமைச்சர் பதவி என சொல்லி கொண்டுள்ளார்கள். எப்படியாவது உதயநிதிக்கு இளவரசர் பட்டம் சூட்டிவிட வேண்டும் என்ற ஆசை அவரது குடும்பத்தினரிடம் உள்ளது எனவும் விமர்சித்தார்.

இதையும் படிக்க    ]  "திமுக ஒரு கட்டுப்பாடு இல்லாத கட்சி ...! இந்த அரசு எப்படி மக்கள் நலனில் அக்கறை காட்டும்...?" - கே.பி. முனுசாமி.
  
மேலும், சாராயத்தின் மூலம் எப்படி முதலமைச்சர் குடும்பத்திற்கு பணத்தை ஈட்டி தர முடியும் என்பதிலேயே அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளதாகவும்,  ஒரு நாளைக்கு முதலமைச்சர் குடும்பத்திற்கு 25 கோடி வழங்கப்படுகிறது என்றும் கூறினார்.  இவ்வாறு நாட்டு மக்களை ஏமாற்றி கொள்ளையடிப்பதிலேயே குறியாக இருக்கும் திமுக பற்றி நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் என பேசினார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com