பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து இன்று முதலமைச்சர் மாட்டிக் கொண்டு முழிக்கிறார் என டிடிவி தினகரன் விமர்சனம்.
போதைப் பொருளை பொறுத்தவரை Drug transport hub- யாக தமிழ்நாடு மாறிக்கொண்டு வருகிறது
இளைஞர்கள் பாசறை:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் கழக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு டிடிவி தினகரன் ஆலோசனை வழங்கினார். ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் பேசியதாவது,
இன்று இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை கூட்டம் நடைபெற்றது எனவும் மாவட்டச் செயலாளர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் ஆலோசனை வழங்கினோம்.
அம்மா உணவகம்:
அம்மா உணவகத்தில் குறைந்த விலையில் தரமான உணவுகள் கொடுப்பதாக பல நிபுணர்கள் கூறினார்கள் எனவும் சரியான கருத்தை அமைச்சர் மாசு கூற வேண்டும் எனவும் இதில் அரசியல் செய்ய வேண்டாம் எனவும் டிடிவி கூறினார். அம்மாவின் திட்டங்களை கலைஞர் பெயரில் மாற்றி வைக்க வேண்டும் என்பது திமுக அரசின் எண்ணமாக இருக்கிறது எனவும் ஏழை பணக்காரர் என பலதரப்பட்ட மக்களுக்கு அம்மா உணவகத்தில் பயன் கிடைக்கிறது எனவும் தெரிவித்தார்.
திராவிட மாடல்:
திராவிட மாடல் என்று பொய் சொல்லாமல், சின்னத்தனமாக நடந்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று கூறிய டிடிவி பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து இன்று முதலமைச்சர் மாட்டிக்கிட்டு முழிக்கிறார் எனவும் கூறினார் டிடிவி. இந்திய இறையாண்மைக்கு எதிராக இந்த ஆட்சி செயல்படுகிறது எனவும் இந்த ஆட்சியாளர்கள் தங்களையும், தங்கள் குடும்பத்தையும் வளர்ச்சிக்காகவுமே பாடுபடுகிறார்கள் எனவும் அவர்கள் மக்களை கண்டு கொள்வதில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக:
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வருவது குறித்து கருத்து கேட்டதற்கு அவர் வந்து ஒன்றும் செய்ய போவது இல்லை எனவும் அவரது 4 படங்களை மட்டுமே கிழிப்பார் எனவும் தெரிவித்தார். மேலும் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் கூறினார்.