சென்னை பழைய மகாபலிபுரம் சாலை நாவலூர் சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இரண்டு நாள் டவல்களால் செய்யப்பட்ட விலங்கு மற்றும் பறவைகள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இந்த நட்சத்திர ஹோட்டலில் பணிபுரியும் சதீஷ் என்ற இளைஞருக்கு சிறுவயதில் இருந்து ஓவியத்தில் ஆர்வம் இருந்ததால் நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய குளியலறை டவல், முகம் துடைக்க பயன்படுத்தக்கூடிய டவல், கை துடைக்க பயன்படுத்தக் கூடிய டவல் இப்படி பல விதமான டவல்களை மட்டும் வைத்து விநாயகர், அன்னப்பறவை, மயில், யானை, படகில் மக்கள் பயணம் செய்வது போல், நண்டு, வண்ணத்துப்பூச்சி, கடல் கன்னி, சமையல் செப், பூக்கூடை, குரங்கு மரத்தில் தொங்குவது போல் இப்படி பல விதமான விலங்கு மற்றும் பறவைகள், கடல் சார்ந்த உயிரினங்களை தத்ருவமாக டவல் மூலம் உருவம் கொடுத்து அதை கண்காட்சியாக காட்சிப்படுத்தி உள்ளனர்.
டவல் மூலம் விலங்கு மற்றும் பறவைகள் செய்து கண்காட்சியாக அமைத்துள்ளதை இந்த நட்சத்திர விடுதியில் தங்கும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நபர்கள் இதை கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.
ஹோட்டலில் தங்கும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் செய்து வருவதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.