"நாளை நமதே..! நாற்பதும் நமதே...! " - அன்பில் மகேஷ் பொய்யாமொழி .

ராஜராஜசோழனாக கலைஞரும்.... ராஜேந்திரசோழனாக ஸ்டாலினும்....
"நாளை நமதே..!  நாற்பதும் நமதே...! "   - அன்பில் மகேஷ் பொய்யாமொழி .
Published on
Updated on
2 min read

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 

"தமிழகம் முழுவதும் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனையை விளக்கி ஆயிரத்து 222 இடங்களில் பொதுக் கூட்டங்கள் நடைபெறுகிறது. வரலாற்றில் இதுதான் அதிக அளவில் நடைபெறும் பொதுக்கூட்ட சாதனையாகும்.  திராவிடம் காலாவதியாகிவிட்டது என சிலர் கூறுகிறார்கள் ஆனால் சனாதானம், மனுநீதி ஆகியவற்றை காலாவதி ஆக்கியது திராவிடம் தான் என்றார்.

 ஜனாதிபதி  திரௌபதி முர்மு 230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலைஞர் மருத்துவமனையை திறந்து வைப்பதற்கு வர இருப்பதாகவும், கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவும் வரவிருக்கிறது என தெரிவித்தார். 

மேலும், மதுரையில் 150 கோடி மதிப்பீட்டில் பள்ளி கல்வித்துறை சார்பில் கலைஞர் நூலகம் கட்டப்பட்டு திறக்கப்பட உள்ளதாகவும்,  மே மாதத்திலே 70 ஆயிரம் குழந்தைகள் அரசு பள்ளிகள் சேர்வதற்கு விண்ணப்பங்களை பெற்று சென்றுள்ளனர் என்றும் கூறினார்.

திமுக ஆட்சி காலத்தில் திருவெறும்பூர் தொகுதியில் நமக்கு நாமே திட்டம், டைட்டில் பார்க், வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கும்  நிகழ்ச்சிகளை தமிழக முதல்வராக கலைஞர் இருந்தப் போது திருவெறும்பூரில் துவக்கி வைத்தார் என்றும், ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் 10 வருடமாக திருவெறும்பூர் தொகுதியில் எந்த திட்டமும் துவக்கி வைக்கப்படவில்லை என்றும்  திருவெறும்பூர் தொகுதியில் தற்பொழுது கூட தீயணைப்பு நிலையம் கொண்டுவரப்படும் என முதல்வர் அறிவித்துள்ளதாகவும் கூறினார்.

தமிழக இளைஞர் நல மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்;  பிள்ளைகள் விளையாடுவதற்காக திருவெறும்பூர் தொகுதியில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என அரித்திருந்ததை சுட்டிகாட்டி, இப்படி தந்தையும் மகனும் மாறி மாறி திருவெறும்பூர் பகுதிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வருகின்றனர் என்றும் புகழ்ந்தார்.

மேலும்,  திமுக தலைவர் அடிப்படையில் இருந்தே அரசியல்வாதி அடிபட்டுவந்ததால் தான் மக்களைப் பற்றி நன்றாக தெரியும் அடியில் நகர்ந்து வந்தவர்களுக்கு எல்லாம் அது தெரியாது.என்றும், கடந்த பத்து வருடமாக தமிழகத்தை சீரழித்து விட்டார்கள் திராவிட மாடல் என்பது அழிக்காது, சீராக்கும், அரவணைக்கும்.

மேலும்  2024 ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் மாநில உரிமை பாதுகாப்பு தேர்தல் ஆகும் எனவும்,  கலைஞர் தலைவராக இருந்த பொழுது 40க்கு 40 தொகுதிகளின் வெற்றி பெற்று ராஜராஜ சோழனாக இருந்ததாகவும், அப்போது,  அவரது மகன் ஸ்டாலின்  40க்கு 39 தொகுதிகள் வெற்றி பெற்று ராஜேந்திர சோழனாக இருந்தார் என்று கூறியவர், 

  தற்பொழுது வரும் நாடாளுமன்ற தேர்தலில் கலைஞரின் மகனாக 40க்கு 40 இடம் வெற்றி பெற செய்ய வேண்டும் அதில் திருச்சி மாவட்டம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று கூறினார். பின்னர் பேச்சின் இறுதியில்,  "நாளை நமதே நாற்பதும் நமதே", என்றார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com