பண மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 10 மணி நேரம் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.
ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ராஜேந்திரபாலாஜி மீது வழக்கு தொரடப்பட்டது.
இந்த வழக்கில் ஜாமீனில் விடுதலையான ராஜேந்திர பாலாஜியை விசாரணைக்கு ஆஜராகுமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். இதனையடுத்து நேற்று விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரான ராஜேந்திர பாலாஜியிடம், சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
மோசடி வழக்கு தொடர்பாக 100 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு அவர் விளக்கம் அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.