ராணிப்பேட்டையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய... வேளாண் இடுபொருட்கள் ஏரியில் கொட்டப்பட்ட அவலம்...!

கடந்த 2014 அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு வழங்க அரசால் வழங்கப்பட்ட விதை நெல்கள்,.... அதிகாரிகள் சரிவர வழங்காமல் கிடங்கில் பதுக்கி வைத்த அவலம்...!
ராணிப்பேட்டையில்  விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய...   வேளாண் இடுபொருட்கள்  ஏரியில் கொட்டப்பட்ட அவலம்...!
Published on
Updated on
1 min read

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய வேளாண் இடுபொருட்களை மர்மநபர்கள் ஏரியில் கொட்டி அட்டுழியம் செய்துள்ளனர்கள். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அரக்கோணம் வட்டத்தில்  விவசாயிகளுக்கு வேளாண்மை இடுபொருட்களான விதைகள், உரங்கள், நுண்ணூரிகள் வழங்குவதற்கு அரசு வேளாண்மை விரிவாக்க மையம் செயல்பட்டு வருகின்றது. இந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் கடந்த 2014 அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு வழங்க அரசால் வழங்கப்பட்ட விதை நெல்கள், மக்காச்சோள விதைகள், ஊளுந்து, துவரை, பச்சைப்பயறு, வேர்க்கடலை, உரங்கள், பூச்சிக்கொல்லிகள், பயிர்களுக்கு தெளிக்கப்படும் நுண்ணூயிர்கள் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் சரிவர வழங்காமல் கிடங்கில் பதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது.

இவ்வாறிருக்க, காலம் கடந்து அவைகள் மக்கி கெட்டு போனதை வேளாண்மை விரிவாக்க மைய அதிகாரிகள் யாருக்கும் தெரியாமல் அரக்கோணம் அடுத்த உளியம்பாக்கம் ஊராட்சி கார்ப்பந்தாங்கல் ஏரியில் டிராக்டரில் மர்மநபர்கள் உதவியுடன் இன்று காலை கொட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனை பார்த்த உளியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அரக்கோணம் தாலூகா காவல்துறை மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வேளாண்மை இடுபொருட்களை விவசாயிகளுக்கு வழங்காமல் ஏமாற்றி அவை மக்கி கெட்டுபோக  காரணமான அதிகாரிகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்கள்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com