வன ஆய்வாளர் பழகுனருக்கான தேர்வில் மாற்றத்தை அறிவித்த டி.என்.பி.எஸ்.சி....என்ன மாற்றம்?!!!

வன ஆய்வாளர் பழகுனருக்கான தேர்வில் மாற்றத்தை அறிவித்த டி.என்.பி.எஸ்.சி....என்ன மாற்றம்?!!!
Published on
Updated on
1 min read

வன ஆய்வாளர் பழகுனருக்கான தேர்வானது தமிழ்நாடு முழுவதும் 15 இடங்களில் நடைபெற இருந்த நிலையில் தற்போது தேர்வு மையங்களின் எண்ணிக்கையானது 7 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் வனத்தொழில் பழகுனருக்கான காலி பணியிடங்கள் நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான, தேர்வு மையங்களாக முதல் கட்டமாக கடந்த எட்டாம் தேதி டி.என்.பி.எஸ்.சி மூலம் 15 மையங்கள் தேர்வு செய்யப்பட்டது.

ஆனால், தற்போது தேர்வு செய்யப்பட்ட 15 மையங்களின் எண்ணிக்கையானது ஏழு மையங்களாக குறைக்கப்பட்டுள்ளது என டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி,சென்னை,கோயம்புத்தூர்,மதுரை, சேலம்,திருச்சி,  திருநெல்வேலி,வேலூர் ஆகிய 7 நகரங்களில் நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

கட்டாய தேர்வான தமிழ் மொழி தேர்வு ஓ.எம்.ஆர் ஷீட் முறையிலும், மற்ற பிற பாடங்கள் கணினி வழி தேர்வாகவும் நடைபெற உள்ளது.

இந்த தேர்வுகள் வருகிற டிசம்பர் மாதம் நான்காம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com