"இயற்கை காரணங்களாலேயே புலிகள் இறப்பு நிகழ்ந்துள்ளது" - தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம்!

Published on
Updated on
1 min read

நீலகிரி மாவட்டத்தில் இயற்கை காரணங்களால் புலிகள் இறந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

60 சதவீத வனப்பகுதியை கொண்ட நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் மட்டும் 4 குட்டிப் புலிகள் உட்பட 10 புலிகள் உயிரிழந்தன. இதனையடுத்து, புலிகளின் எச்சம் மற்றும் கால் தடங்களை கொண்டு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், சீகூர் மற்றும் சின்ன குன்னூர் வனப்பகுதியில் தாய்ப் பால் கிடைக்காததால் 4 குட்டிப் புலிகள் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.  மேலும் உயிரிழந்த புலிகளின் மாதிரிகளை டி.என்.ஏ. ஆய்வுக்கு உட்படுத்தியதில் இயற்கை காரணங்களாலேயே புலிகள் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com