சூலூரில் விண்வெளி தொழில் பூங்கா...ஆன்லைன் ஒப்பந்தபுள்ளிகளை கோரியது TIDCO !

சூலூரில் விண்வெளி தொழில் பூங்கா...ஆன்லைன் ஒப்பந்தபுள்ளிகளை கோரியது  TIDCO !
Published on
Updated on
1 min read

கோயம்புத்தூர் சூலூரில் விண்வெளி தொழில் பூங்கா அமைப்பதற்கான தொழில்நுட்ப பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிப்பதற்கான ஆலோசகர்களை தேர்வு செய்வதற்கான ஆன்லைன் ஒப்பந்தபுள்ளிகளை  TIDCO கோரியுள்ளது.

தமிழகத்தில் தொழில் வளர்ச்சியைத் தூண்டுவதற்காக பெரிய, நடுத்தர மற்றும் சிறு தொழில்களை நிறுவுதல் மற்றும் எளிதாக்குதல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு அரசு, மாநிலத்தில் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்தை செயல்படுத்துவதற்கு டிட்கோ முகமை நிறுவனமாக செயல்படுத்தி வருகிறது. 

டிட்கோ, மாநிலத்தின் விண்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்தி சூழலை வலுப்படுத்த பல்வேறு உத்திகளை தொடங்கியுள்ளது. இதன்‌ ஒரு கட்டமாக, கோயம்புத்தூர் சூலூரில் ஒரு விண்வெளி தொழில் பூங்காவை அமைக்க திட்டமிட்டுள்ளது.

"கோயம்புத்தூர் சூலூரில் விண்வெளி தொழில் பூங்கா அமைப்பதற்கான தொழில்நுட்ப பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிப்பதற்கான" ஆலோசகர்களை தேர்வு செய்வதற்கான ஆன்லைன் ஒப்பந்தபுள்ளிகளை  TIDCO கோரியுள்ளது.

ஆர்வமுள்ள ஆலோசனை நிறுவனங்கள் டெண்டரை https://tidco.com & www.tntenders.gov.in என்ற இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். டெண்டர்கள் www.tntenders.gov.in மூலம் 26.06.2023 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு அல்லது அதற்கு முன் பதிவேற்றம் செய்யப்பட்டு 27.06.2023 அன்று மாலை 3.30 மணிக்கு திறக்கப்படும் என்று டிட்கோ தெரிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com