வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லை என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மின்கட்டணம் தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணுக்கு பதிலாக, சென்ற ஆகஸ்ட் மாதத்தின் விலை குறையீட்டு எண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனால் கட்டண உயர்வின் அளவு 4 புள்ளி 7 சதவீதத்தில் இருந்து 2 புள்ளி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
தொடர்ந்து வீட்டு இணைப்பு நுகர்வோருக்கு ஏற்படும் 2 புள்ளி 18 சதவீத உயர்வையும் அரசே ஏற்று மின்வாரியத்திற்கு மானியமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : கோடை மழையால் பயிர்கள் சேதம்...நிவாரணம் வழங்க வலியுறுத்தல்!
இந்நிலையில் வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரமும் கைத்தறி, விசைத்தறி போன்றவைகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார சலுகைகளும் தொடர்ந்து வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
வணிகம் மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டும் யூனிட்டுக்கு 13 முதல் 21 காசுகள் வரை மின்கட்டணம் உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.