”ஆசிரியர் சங்கங்களுக்குள் முரண்பாடுகள் உள்ளன..! ஒன்றாக வந்தால் பேச்சுவார்த்தை நடத்தலாம்” - அமைச்சர் அன்பில் மகேஷ்

”ஆசிரியர் சங்கங்களுக்குள் முரண்பாடுகள் உள்ளன..!  ஒன்றாக வந்தால் பேச்சுவார்த்தை நடத்தலாம்” - அமைச்சர்  அன்பில் மகேஷ்
Published on
Updated on
2 min read

ஆசிரியர் சங்கங்களுக்குள் உள்ள முரண்பாடுகளை பேசி தீர்த்துக் கொண்டு ஒருமித்த கருத்துகளுடன் தன்னை வந்து சந்திக்குமாறு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

அண்ணா நூற்றாண்டு, நூலகம் செம்மொழிப் பூங்கா, ஜெமினி மேம்பாலம், கலங்கரை விளக்கம், உள்ளிட்ட 9 இடங்களுக்கு மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் வாகனத்தை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது:-  

நவீன தமிழ்நாட்டு சிற்பி கலைஞரின் பாதையில் ஒரு பயணம் என்னும் திட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் கலைஞர் ஆட்சிக் காலத்தில் சிறப்பாக செய்த திட்டங்கள் அனைத்தையும் மாணவர்களிடம் கொண்டு  செல்ல வேண்டும் என்னும் நோக்கில் பள்ளி கல்வித்துறை சார்பில் சென்னையில் அரசு பள்ளிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை தேர்ந்தெடுத்து  முதல் கட்டமாக அண்ணா நூற்றாண்டு நூலகம் , செம்மொழி பூங்கா ,மெரினா கடற்கரை , மற்றும் கலைஞர் சிலை, கண்ணகி சிலை  என கலைஞர் எழுப்பிய கட்டிடங்களின் முக்கியத்துவத்தையும் வரலாற்றையும் பற்றி மாணவர்களிடம் எடுத்து கூறும் வகையில் இந்த கல்வி சுற்றுலா நிகழ்ச்சி அமைந்திருக்கின்றது.

இதை போல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கலைஞர் எழுப்பிய கட்டிடங்களின் முக்கியத்துவத்தை மாணவர்களிடம் கொண்டு செல்லும் விதமாக  5 குழுவாக மாணவர்கள் செல்ல உள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டத்தின் அடிப்படையில் மாணவர் குழுக்கள் அழைக்கப்பட்டு பூம்புகார் போன்று கலைஞரின்  சிறப்பு திட்டங்களின் சிறப்பினை உணர்த்தும்படி சுற்றுலா நடைபெற உள்ளது.

சிஏஜி, அதிமுக ஆட்சியில் 4.27 கோடி ரூபாய் நீட் மற்றும் ஜேஈஈ தேர்வுகளுக்கு செய்த செலவு தேவை அற்றது எனவும், அதனால் எந்த ஒரு தாக்கமும் இல்லை என தெளிவாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்...

385 பயிற்சி மையங்கள் வைத்து 2018-19 ஆம் ஆண்டுகளில் அதற்கென்று பல கோடி ரூபாய் செலவு செய்து, ஒரு ஆண்டு காலத்தில் வெறும் 103 நாட்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது...

மாணவர்களுக்கு நீட் மற்றும் ஜேஈஈ தேர்வுகள் தொடர்பான வழிகாட்டுதல் அமைக்கும் புத்தகங்கள் 3.15 கோடி ரூபாய்க்கு வாங்கியதாக தெரிவித்தனர். ஆனால் வாங்கிய புத்தகங்கள் மாணவர்களுக்கு அளிக்கப்படாமல் இருந்தது மட்டுமல்லாமல் அடுத்த ஆண்டு 2 கோடி ரூபாய்க்கு அந்த புத்தகங்கள் மறுகொள்முதல் செய்துள்ளனர் , எந்த வித திட்டமிடலும் இல்லாமல் செயல்பட்டதாக சி ஏ ஜி அறிக்கை கூறுகிறது எனவும் தெரிவித்தார்.

சிஏஜி அறிக்கையின் படி தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்கள் பேச்சுவார்த்தைக்காக காலை 8 மணி முதல் எனது இல்லத்தில் காத்திருந்தேன். ஒவ்வொரு அதிகாரிக்கும் தொலைபேசியில் அழைப்பு விடுப்பது சாத்தியம் இல்லாத ஒன்று.

ஆசிரியர் சங்கங்களுக்குள் முரண்பாடுகள் உள்ளன. அவர்கள் அனைவரும் கலந்து பேசி ஒருமித்த கருத்துடன் என்னை வந்து சந்திக்க ஊடகங்கள் வாயிலாகவும் அழைப்புவிடுக்கிறேன். ஆசிரியர்கள் பேச்சுவார்த்தைக்காக இன்று நாள் முழுக்க காத்திருப்பேன் , அவர்களுக்காக எனது அலுவலக கதவுகள் திறந்து உள்ளது என தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com