சேவை இல்லாத பகுதியில் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வங்கிகள் தொடங்கப்படும். ஆர்.கே நகரின் கொருக்குப்பேட்டை பகுதியில் இந்த ஆண்டே கூட்டுறவு வங்கி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகளின் வினாக்கள் விடைகள் நேரத்தில் ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர், புதுப்பேட்டை நேதாஜி நகர் கே.ஜே.நகர், எழில் நகர் பகுதிகளில் ஒன்றரை லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர் எனவும் இந்த நிலையில் கடந்த 40 ஆண்டுகளாக அந்த இடத்தில் எவ்வித வங்கி சேவையும் இல்லை எனவும் கூறிய அவர் தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு கூட்டுறவு வங்கி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதியில் துறை ரீதியான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சாதகமான பதில் பெறப்பட்டுள்ளது எனவும் வங்கி சேவை இல்லாத பகுதியில் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வங்கிகள் தொடங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டையில் இந்த ஆண்டு கூட்டுறவு வங்கி தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், எனவும் கூறினார்.