நலத்திட்ட உதவி பொருட்களை சூரையாடிச் சென்ற பொதுமக்கள்...!!!

நலத்திட்ட உதவி பொருட்களை சூரையாடிச் சென்ற பொதுமக்கள்...!!!
Published on
Updated on
1 min read

ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் தள்ளு முள்ளு.  நலத்திட்ட உதவி பொருட்களை அடித்துப் பிடித்துக் கொண்டு சூரையாடிச் சென்ற பொதுமக்கள்.  கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீசார்.

நலத்திட்ட உதவிகள்:

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் எஸ்.டி.கருணாநிதி தலைமையில் முதல்வர் மு.க. ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் பொதுக் கூட்டம் மற்றும் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.  இவ்விழாவில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  

தொடங்கிய அமைச்சர்:

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 70வது பிறந்தநாள் கொண்டாடத்தை குறித்தும் தமிழக அரசின் சாதனைகள் குறித்தும் மக்களிடத்தில் உரையாடி பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்க தொடங்கினார்.  அமைச்சர் தா.மோ. அன்பரசனோ கடமைக்கு  ஒரு சிலருக்கு மட்டும் நலத்திட்ட உதவிகள் வழங்கிவிட்டு மேடையில் இருந்து உடனே கீழே இறங்கி அடுத்த நிகழ்வுக்காக புறப்பட்டு சென்றார்.

சூரையாடிய மக்கள்:

அப்போது கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு மேடை அருகே குவிந்தனர்.  ஏற்கனவே அமைச்சர் வருவதற்கே 3 மணி நேரம் தாமதமானதால் அங்கு இருந்த பொதுமக்கள் பொறுமை இழந்து அனைவரும் முந்தி அடித்துக் கொண்டு கீழே விழுந்தும் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தும் தென்னங்கன்று, சில்வர் பாத்திரங்கள், அரிசி மூட்டைகள் என அனைத்தையும் எடுத்துச் சென்றனர்.  இதனிடையே கட்டுங்கடாங்காத கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் திணறினர்.

முறையாக..:

இதில் மூதாட்டிகளை வாலிபர் ஒருவர் அடித்து கீழே தள்ளியதும் , மேடை மேல் இருந்தபடி ஆபத்தை உணராமல் இலவச பொருளுக்காக ஆண்கள் பெண்கள் பேதமின்றி அள்ளிச் சென்றது  ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த பிறந்தநாள் மற்றும் நலத்திட்ட விழா ஏற்பாடுகளை முறையாக செய்யவில்லை என திமுகவினரே முனுமுனுத்து சென்றது  குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com