''சாதி முறைகள் பற்றி தெரியாத நீதிபதியின் தீர்ப்பு கண்டிக்கத்தக்கது'' காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமார்!

''சாதி முறைகள் பற்றி தெரியாத நீதிபதியின் தீர்ப்பு கண்டிக்கத்தக்கது'' காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமார்!
Published on
Updated on
1 min read

சாதி முறைகளை பற்றி தெரியாத நீதிபதி ஒருவர், தீர்ப்பு வழங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது என காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார்.


சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் காமராஜரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், மோடி என்கிற பெயர் ஒரு சாதி இல்லை என்றும், எல்லா சமயத்தைச் சார்ந்தவர்கள் மத்தியிலும் மோடி என்கிற பெயர் இருப்பதாகவும் கூறினார். மேலும் மோடி என்ற பட்டப்பெயர் இஸ்லாமியர்கள் மத்தியிலும் இருப்பதாக தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், சாதி முறைகளை பற்றி தெரியாத நீதிபதி, ஒரு சாதியை குறைகூறி சொல்லி இருக்கிறார் என தீர்ப்பு வழங்கிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com