2 ஆயிரம் ரூபாய் நோட்டை அறிமுகம் செய்தது இமாலய பிழை என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
ராஜீவ்காந்தி நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் காரைக்குடி எம்.பி அலுவலகத்தில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், கருப்பு பணத்தை பதுக்குகிறார்கள் என்று 2 ஆயிரம் ரூபாய் நோட்டை அறிமுகம் செய்தது இமாலய பிழை என்று கூறியவர், பிழையை 7 ஆண்டுகளுக்கு பிறகு திருத்தி கொள்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், சந்தைகொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட நிகழ்வுகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் கிடையாது என்றும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அனைத்தும் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்கள், மொத்த வியாபாரிகள் கையில் மட்டுமே இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.