CAG அறிக்கை மூலம் யார் யார் ஊழலில் ஈடுபட்டிருக்கிறார்கள் என தமிழக முதல்வர் அறிவிப்பார்..! - மா.சுப்ரமணியம்

CAG அறிக்கை மூலம் யார் யார் ஊழலில் ஈடுபட்டிருக்கிறார்கள்  என தமிழக முதல்வர் அறிவிப்பார்..!  -  மா.சுப்ரமணியம்
Published on
Updated on
1 min read

மதுரையில் நாளை நடைபெறும் சத்திரப்பட்டி ஜல்லிக்கட்டு  போட்டியில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் இன்று இரவு மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் 
மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்.,

சிஏஜி மூலமாக அதிமுக மீது திமுக என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், சிஏஜி மூலம் சட்டபூர்வமான  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது எனவும், அதன்  அறிக்கை மூலம் யார் யார் ஊழலில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்ற பெயர் பட்டியல் குறித்து தமிழக முதல்வர் அறிவிப்பார் என கூறினார். 

மேலும், கள்ளிக்குடி., கூடக்கோயில் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் இடியும் நிலையில் உள்ளது என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், 

ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் வாடகை கட்டிடங்கள் இடியும் நிலையில் எங்கெங்கு இருக்கிறதோ அவைகளை மாற்றி அமைக்கும் பணியில் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் 15-வது நிதி ஆணையத்தின் மூலம் 800 கோடிகளின் செலவில் புதிதாக கட்டிடங்கள் கட்டப்பட்டு ஆங்காங்கே திறந்து வைக்கப்படுகின்றன எனவும், . ஆயிரம் கட்டிடங்கள் வாடகை கட்டிடங்களாக உள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும், 1500 கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளது எனவும்,  நிதி ஆதாரத்தின் அடிப்படையில் எந்தெந்த கட்டிடங்களுக்கு முன்னுரிமையாக வசதி தேவைப்படுகிறதோ அந்த கட்டிடங்களுக்கு அப்பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றும்  அவர் கூறினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com