உடனே சிறுவன் தன் கையிலிருந்த நோட்டை நீட்டி “ஆட்டோகிராப் வேண்டும்” எனக் கூற, உடனே முதலமைச்சர் ரங்கசாமிநோட்டை வாங்கி, "நல்வாழ்த்துக்கள்; படி.. படி.. படி.. முன்னேறலாம்; ந.ரங்கசாமி" என கையெழுத்திட்டு கொடுத்தார். அதனை ஆர்வமாக வாங்கிச் சென்ற அச்சிறுவன், தனது சக நண்பர்களிடம், முதல்வர் கையெழுத்தை காட்டி மகிழ்ந்தான். முதலமைச்சரின் இந்த செயல் அங்கிருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.