தமிழ்நாட்டில் திமுகவின் ஆட்சி...தமிழ் இலக்கியத்தின் ஆட்சி காலம்தான்...மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

தமிழ்நாட்டில் திமுகவின் ஆட்சி...தமிழ் இலக்கியத்தின் ஆட்சி காலம்தான்...மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி என்பது தமிழ் இலக்கியத்தின் ஆட்சியாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை இலக்கிய திருவிழா:

சென்னை இலக்கியத் திருவிழாவிற்காக அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் படைப்பரங்கம், பண்பாட்டு அரங்கம், கல்லூரி மாணவர்களுக்கான பயிலும் அரங்கம் மற்றும் சிறுவர்களுக்கான இலக்கிய அரங்கம் என 4 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் சென்னை இலக்கியத் திருவிழாவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் மருத்துவ படிப்புக்கான மொழி பெயர்ப்பு  பாடநூல் உள்பட 100 நூல்களையும் வெளியிட்டார்.

திமுக ஆட்சி ஒரு தமிழாட்சி:

இதனைதொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியில் தான் தமிழுக்காக ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், தமிழ் புலவர்களுக்கு சென்னை கடற்கரையில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், திமுக ஆட்சி ஒரு தமிழாட்சி என்றும் தெரிவித்தார். 

தமிழ்நாடு என பெயர் சூட்டியது திமுக:

அதுமட்டுமின்றி, மெட்ராஸ் என்ற பெயரை  சென்னை என்று மாற்றியதும், ஸ்ரீ என்பதை திரு, திருமதியாக மாற்றியதும், ஈராயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட தமிழர்களுடைய நிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டியதும் திமுக ஆட்சியில் தான் என பட்டியலிட்டார். 

தமிழ் இலக்கியத்தின் ஆட்சி:

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளி முதல் கல்லூரி வரை தமிழ் வழியில் கல்வி கற்கலாம் என்றும், கடந்த ஓராண்டுகளில் ஏராளமான தமிழ் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது என்றும், தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி என்பது  தமிழ் இலக்கியத்தின் ஆட்சியாகவே நடந்து கொண்டு வருகிறது எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com