ராகுல்காந்தி மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை கோரிய வழக்கு... போக்சோ நீதி மன்றத்தில் முறையிட உத்தரவு...

ராகுல்காந்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை கோரி மதுரை நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் போக்சோ நீதி மன்றத்தில் முறையீட்டு கொள்ளுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ராகுல்காந்தி மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை கோரிய வழக்கு... போக்சோ நீதி மன்றத்தில் முறையிட உத்தரவு...
Published on
Updated on
1 min read

டெல்லியில் கடந்த ஒன்றாம் தேதி பட்டியல் வகுப்பை சேர்ந்த ஒன்பது வயது சிறுமி சமூக விரோதிகளால் கற்பழிக்கப் பட்டு படு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்தினரை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி சந்தித்து ஆறுதல் அளித்தார். இதனையடுத்து சந்தித்த புகைப்படங்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதனை பல்வேறு காங்கிரஸ் கட்சி பிரமுகர்களும் பகிர்ந்துள்ளனர்.

இது குறித்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவின் (போக்சோ சட்டத்தின்)  கீழ்  ராகுல்காந்தி, மாணிக்தாகூர், கே.சி. வேணுகோபால் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் மதுரை தாசில்தார் நகரை சேர்ந்த வழக்கறிஞர் முகமதுரஸ்வி என்பவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாவட்ட 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி பிரவீன்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் முகமது ரஸ்வி தரப்பில் வழக்கறிஞர்கள். முத்துக்குமார், நீலமேகம் ஆகியோர் ஆஜராகிய நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த கட்ட விசாரணையை செப்டம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, இந்த மனுவில் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை கோரியுள்ளதால், மனுதாரர் உரிய நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து பரிகாரம் தேடிக் கொள்ளலாம் என  உத்தரவிட்டார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com