கட்டுமான தொழிலாளா்கள், வெளிமாநில தொழிலாளா்கள் பணியிடத்தில் விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் அவா்களது உடலை தொழிலாளியின் சொந்த ஊருக்கு தமிழக அரசு செலவில் எடுத்துச் செல்லப்படுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கட்டுமானத் தொழிலாளா்கள், வெளிமாநில தொழிலாளா்கள் போன்றோர், பணியிடத்தில் விபத்தால் உயிரிழக்க நேரிட்டால், அவா்களது உடலை அந்த தொழிலாளியின் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல நிதியுதவி அளிப்பது தொடா்பாக சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதனை செயல்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில் வாழும் கட்டுமானத் தொழிலாளா்கள் பணியிடத்தில் விபத்தால் உயிரிழக்க நேரிட்டால் அவா்களின் உடலை உடல் கூறாய்வுக்கு பின்னா் மருத்துவமனையிலிருந்து அரசு அமரா் ஊா்தி மூலம் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்காக ஏற்படும், செலவும், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவா்கள் வாயிலாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புலம்பெயா்ந்த கட்டுமானத் தொழிலாளா்கள் பணியிடத்தில் விபத்தால் உயிரிழக்க நேரிட்டால் அவா்களின் உடலை, உடல் கூராய்வுக்குப் பின்னா், அரசு அமரா் ஊா்தி, ரயில் அல்லது விமானம் மூலம் சொந்த ஊருக்கு எடுத்து செல்வதெனில் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் நிதியுதவியாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவா் வாயிலாக, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தால் வழங்கப்படும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க || "ராகுல் விவகாரத்தில் பிரதமர் மோடியின் முயற்சி தோல்வி" கே.எஸ் அழகிரி!!