எஸ்.பி வேலுமணி மீதான வழக்கு... 3 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீதான  டெண்டர் முறைகேடு வழக்கு தொடர்பான அறிக்கையை  தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எஸ்.பி வேலுமணி மீதான வழக்கு...  3 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
Published on
Updated on
1 min read

எஸ்.பி வேலுமணிக்கு  எதிராக திமுக தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வேலுமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் ஒரு நபர் அதிகாரி நியமனம் செய்யப்பட்டு டெண்டர் முறைகேடு தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக வாதிட்டார். 

எஸ்.பி வேலுமணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும்  அவர் குறிப்பிட்டார். இதனை கேட்டு கொண்ட தலைமை நீதிபதி என்.வி ரமணா, எஸ்.பி வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு தொடர்பாக  சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் 3 வாரத்திற்குள் தாக்கல் செய்ய  பதிவாளருக்கு உத்தரவிட்டார்.  

முன்னதாக தாம் அமைச்சராக இருந்த காலத்தில் ஊரக உள்ளாட்சித்துறை பணிகளை சட்டவிரோதமாக தனது உறவினர்கள் நண்பர்கள் பினாமிகள் பெயரில் முறைகேடாக டென்டர் வழங்கினார் என எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு தொடுக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com