உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஆசிரியர்கள்... எதற்காக?!!

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஆசிரியர்கள்... எதற்காக?!!
Published on
Updated on
1 min read

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஆசிரியர்கள்... எதற்காக?!!தமிழ்நாடு மேல்நிலை தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் தலைமை ஆசிரியர்கள்.

உண்ணாவிரத போராட்டம்:

தமிழ்நாடு மேல்நிலைத் தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பாக வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.  இந்த போராட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். 

எதற்காக?:

குறிப்பாக 45 ஆண்டுகாலமாக பதவி உயர்வு இல்லாமல் பணியாற்றி வரும் மேல்நிலை தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கோரிக்கைகள்:

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஆசிரியர்களை கற்றல் கற்பித்தல் பணிகளுக்கு மட்டுமே ஈடுபடுத்த வேண்டும் எனவும் EMIS மற்றும் மாணவர் நலத்திட்டங்களை செயல்படுத்த தனி அலுவலர் நியமிக்க வேண்டும் மருத்துவர்களுக்கு வழங்குவதைப் போல பனி பாதுகாப்பு என்பது தலைமை ஆசிரியர்கள் சங்கங்களுக்கும் வழங்க வேண்டும்,  அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பணி மூப்பு அடிப்படையில் மட்டுமே வழங்க வேண்டும் என்ற ஏழு அம்ச கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

ஒரே ஊதியம்:

மேலும், மாவட்ட கல்வி அலுவலர் பணியிடமும் மேல்நிலை தலைமையாசிரியர் பணியிடமும் ஒத்த ஊதியத்தில் வழங்க வேண்டும், அனைத்து பள்ளிகளுக்கும் அடிப்படை பணியாளர்களை நியமிக்க வேண்டும் எனவும், மேல்நிலை தலைமை ஆசிரியர்கள் காலி பணியிடங்களுக்கு அடுத்த கல்வி ஆண்டுக்குள் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com